azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 05 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 05 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Be careful about your physical health also. Satisfy the demands of nature; the car must be given the petrol that it needs. Otherwise, your head might reel and your eyes might get blurred through sheer exhaustion. How can thoughts of the Lord be stabilised in a weak frame? Only, do not forget the purpose of this body when you are tending it. A road roller is fed with oil and coal and other types of fuel. But why is it kept in good trim? In order to mend the road, is it not? Similarly, remember that you have come embodied so that you might realise the end of this cycle of birth and death. For that sake, use the body as an instrument. Flying hither and thither, higher and higher, the bird has, at last, to perch on a tree for rest. So too, even the richest and the most powerful man seeks rest - peace (shanti). (Divine Discourse, Feb 23, 1958)
When you develop human values, you can be free from diseases and even enjoy good health with God's Grace. - Baba
உங்கள் உடல் ஆரோக்கியத்திலும் கூட கவனமாக இருங்கள். இயற்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்; உடலாகிய காருக்குத் தேவையான பெட்ரோலை போடவேண்டும். இல்லை என்றால், மிகுந்த சோர்வினால், உங்கள் கண்கள் செருகி, தலை சுற்றக் கூடும். ஒரு பலவீனமான உடலில் இறைசிந்தனைகள் எவ்வாறு நிலை கொள்ள முடியும்? உடலைப் பராமரிக்கும் போது, இந்த உடலின் குறிக்கோளை மட்டும் மறந்துவிடாமல் இருக்க வேண்டும். ரோடு ரோலர் வண்டிக்கு எண்ணெய், நிலக்கரி மற்றும் பலவிதமான எரிபொருட்கள் போடப்படுகின்றன. அது ஏன் நல்ல நிலையில் பராமரிக்கப்படுகிறது? சாலையை சீர்படுத்துவதற்காகத் தான், அல்லவா? அதைப் போலவே, பிறப்பு-இறப்பு எனும் சுழற்சியிலிருந்து மீள்வதற்காகத்தான் நீங்கள் உடலை ஏற்று வந்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்காக, இந்த உடலை ஒரு கருவியாகப் பயன்படுத்துங்கள். இங்குமங்கும் பறந்து திரிந்து, மேன்மேலும் உயரப் பறந்தாலும், ஒரு பறவை ஓய்வெடுக்க இறுதியாக ஒரு மரத்தின் மீது அமரத் தான் வேண்டும். அதைப்போல, பணம் படைத்தவனும், அதிகாரம் படைத்தவனும் கூட ஓய்வையும் சாந்தியையும் நாடுகின்றனர். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 23, 1958)
நீங்கள் மனிதப்பண்புகளை வளர்த்துக் கொண்டால், நோய் நொடியின்றி இருப்பதோடு, இறைவனுடைய அருளால் நல்ல ஆரோக்கியத்தையும் அனுபவிப்பீர்கள். - பாபா