azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Let the mind run wherever it likes; just be careful not to follow it, seeking to discover where it is going! It will then wander about for some time as the fancy takes it; soon, getting tired and exhausted, it will come back to you in the end! It is like a little child that knows nothing. Since the mother is following it and calling it back, it gets the courage and confidence to run forward in any direction, but if the mother does not run behind the child and instead retraces her steps quietly, the child too, of its own accord, will run back to the mother! Do not care for the vagaries of the mind. Carry on remembrance and meditation of the name and form that you like best, and in the manner you are accustomed to. In this way, you will acquire one-pointedness (ekagrata); you will realise your heart’s desire. (Dhyana Vahini, Ch 8)
To whichever place the mind may wander, instruct it to find only Brahman there. - Baba
மனம் எங்கு வேண்டுமானாலும் ஓடட்டும்; அது எங்கு செல்கிறது என்பதைப் பார்ப்பதற்கு நீங்கள் அதைப் பின்தொடர்ந்து செல்லாமல் கவனமாக இருங்கள். மனம் சிறிது நேரம் இஷ்டம் போல் அலைந்து திரிந்துவிட்டு, களைப்புற்று, சோர்வடைந்து முடிவில் உங்களிடமே திரும்பி வந்துவிடும்! அது ஏதும் அறியாத பச்சிளம் குழந்தையைப் போன்றது. தாய் பின்தொடர்ந்து வந்து கூப்பிட்டுக் கொண்டே இருந்தால், குழந்தைக்கு எந்தப் பக்கமும் ஓடும் தைரியமும், தன்னம்பிக்கையும் வந்து விடுகிறது; ஆனால், தாய் அந்தக் குழந்தையின் பின் ஓடாமல் திரும்பிப் போகத் தொடங்கினால், குழந்தையும் தானாகவே தாயிடம் திரும்பி ஓடி வந்துவிடும்! மனதின் ஊசலாட்டங்களை லட்சியம் செய்யாதீர்கள். உங்களுக்குப் பிடித்த இறைநாம ரூப தியானத்தை உங்களுக்குப் பழக்கப்பட்ட நியமப்படி செய்யுங்கள். இந்த முறையில், உங்களுக்கு ஒருமுகமுனைப்பு (ஏகாக்ரதை) கிடைத்துவிடும்; உங்களுடைய மனவிருப்பங்கள் ஈடேறும். (தியான வாஹினி, அத்தியாயம்-8)
உங்கள் மனம் எங்கு திரிந்தாலும்,அங்கு பரப்ரம்மத்தை மட்டுமே காணுமாறு அதற்கு அறிவுறுத்துங்கள்.