azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
You are truly the embodiment of truth, goodness and beauty. But you have misplaced the key which helps you to tap the springs. That key is in the realm of your inner consciousness; but like the old woman who lost a needle in her dark hut, and searched for it under the street lamp (because, as she said, there was a patch of light underneath it), man is searching for it in the region of material objects in the outer world. It is to persuade you to engage yourself in Namasmarana that I am Myself concluding My discourses with a few Namavalis (string of divine names) which I sing. An officer has to write on the slate, ‘A, B, C,’ and pronounce those letters, in order to teach his children the alphabet. You do not infer that he is himself learning the alphabet, do you? I am but initiating you into this most efficacious sadhana. Strengthen yourself, purify yourself, and educate yourself by this Nama-sankirtan (singing of the divine name). Do it loudly and in company. Let those who join you listen and also imbibe the nectar of the Name. (Divine Discourse, Mar 29, 1968)
Rely on the Shiva (God) in you, not on the shava (corpse) that the body is, without Him. - BABA
நீங்கள் உண்மையிலேயே சத்யம், சிவம் மற்றும் சுந்தரத்தின் திருவுருவமே. ஆனால், அவற்றின் ஊற்றுக்களைப் பயன்படுத்த உதவும் திறவுகோலை எங்கோ மறந்து வைத்துவிட்டீர்கள். அந்த திறவுகோல் உங்கள் உள் உணர்வு பிரதேசத்தில் உள்ளது; ஆனால், தன் இருண்ட குடிசையில் ஊசியைத் தொலைத்துவிட்டு, தெருவிளக்கின் கீழ் அதைத் தேடிய மூதாட்டியைப் போல (அதன் கீழ்தானே வெளிச்சம் இருக்கிறது என்று அவள் கூறுவதால்), மனிதன் அந்தத் திறவுகோலை பொருட்களாலான புற உலகில் தேடிக்கொண்டு இருக்கிறான். நாமஸ்மரணையில் உங்களை ஈடுபடச் செய்வதற்காகவே என் அருளுரைகளை சில நாமாவளிகளைப் பாடி நிறைவு செய்கிறேன். ஒரு அதிகாரி தனது குழந்தைகளுக்குக் கற்பிப்பதற்காக பலகையில் 'ஏ, பி, சி' என்று எழுதி, அந்த எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும். அவரே அரிச்சுவடியைக் கற்றுக்கொள்கிறார் என்று நீங்கள் எண்ணுவதில்லை அல்லவா? நான் உங்களுக்கு மிகவும் பயனுள்ள இந்த ஆன்மிக சாதனையைத் துவக்கி வைக்கிறேனே அன்றி வேறு ஏதுமில்லை. இந்த நாம சங்கீர்த்தனத்தால் உங்களை பலப்படுத்திக் கொள்ளுங்கள், பரிசுத்தப்படுத்திக் கொள்ளுங்கள், கற்றுத் தேர்ந்திடுங்கள். அனைவருடன் சேர்ந்து உரத்த குரலில் பாடுங்கள். உங்களுடன் சேருபவர்களும் அதைக் கேட்டு இறை நாம அமிர்தத்தைப் பருகட்டும். (தெய்வீக அருளுரை, மார்ச் 29, 1968)
உங்களுள் இருக்கும் சிவனைச் (இறைவனை) சார்ந்திருங்கள்; அவனில்லாத சவமான இந்த உடலை அல்ல. - பாபா