azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 29 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 29 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The value of Name and Form consists in the training that they give to the mind. What need is there to train a horse that is already trained? It is the untrained horse that is tutored through so many methods. Similarly, it is to tame the unruly mind that we have prayer, devotional singing, repetition of the Name, and remembrance of the Name. In the initial stages, the horse runs in many directions, but the trainer does not worry. He should hold fast to the reins. The mind, too, naturally runs in different directions when you begin remembrance and repetition of the Name, but you must not yield to despair, anxiety, or indecision. Hold fast to the reins - the Name (nama)! Within a short time, your speech and thoughts will come under your own grip. Only, do not allow anything to come near you that might make you forget the Name of the Lord. You will realise the profit of that Name in due course. (Dhyana Vahini, Ch 8)
As words increase, the vagaries of the mind also increase. Annihilate the mind by quietude. - Baba
மனதை பயிற்றுவிப்பதில் தான் இறைநாம ரூபங்களின் மதிப்பு உள்ளது. ஏற்கனவே பயிற்றுவிக்கப்பட்ட குதிரைக்கு மீண்டும் பயிற்சி எதற்கு? பயிற்சி இல்லாத குதிரைக்கே பல்வேறு வழிகளில் பயிற்சி அளிக்கப்படும். அதே போல, நிலையற்ற மனதை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே, பிரார்த்தனை, பஜனை, இறைநாமஸ்மரணை ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதன்முதலில் குதிரை பல திசைகளில் ஓடும், ஆனால், பயிற்சி அளிப்பவர் கவலைப்படுவதில்லை. அவர் கெட்டியாக கடிவாளத்தை மட்டும் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும். அதேபோல முதலில் நாமஸ்மரணை, தியானம் முதலியவற்றை செய்யும்போது மனம் எனும் குதிரை பல திசைகளில் தறிகெட்டு ஓடுவது சகஜமே, அதற்காக நீங்கள் கவலையோ, கலக்கமோ, விரக்தியோ படக் கூடாது. இறைவனது திருநாமம் எனும் கடிவாளத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். குறுகிய காலத்துக்குள் உங்களுடைய பேச்சும், சிந்தனைகளும் உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இறைவனுடைய திருநாமத்தை மறக்கடிக்கக் கூடிய எதையும் உங்களை அண்டவிடாதீர்கள். இறைவனுடைய திருநாமத்தின் பலனை காலப்போக்கில் நீங்களே உணர்வீர்கள். (தியான வாஹினி, அத்தியாயம்-8)
வார்த்தைகள் அதிகரிக்கும்போது மனதின் ஊசலாட்டங்களும் அதிகரிக்கும். மௌனத்தின் மூலம் மனதை அழியுங்கள். - பாபா