azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 23 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 23 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Riches are needed to secure any article in the world. With riches, articles are acquired, so it follows that riches are superior to articles obtained through them, right? With riches, one can get any article, any time! So too, by means of riches called Nama (Name), “Rupa (Form) of the Lord” is to be earned. If riches called Nama are steadily accumulated, the Lord can be realised through meditation, easily and without difficulty. Another special thing about Nama-Smarana is this: It’s possible to acquire various occult powers through yoga and penance. And there’s every likelihood of the Lord being forgotten when these powers come! Blinded by this pride, one might even let go of the basic victory won by their spiritual practices. This is not the case with the remembrance of Name, its repetition, and meditation! No such dangers beset these paths. These three paths make love in people grow more and more. Through love, peace is achieved. Once peace of mind is achieved, all other conditions are automatically attained. (Dhyana Vahini, Ch 7)
Through yoga and penance, extraordinary power is gained; through remembrance, repetition and meditation of the name, extraordinary love is attained — that is the difference! - Baba
உலகில் எந்தப் பொருளை வாங்கவேண்டும் என்றாலும், தனமே முதன்மையானது. அந்த தனத்தைக் கொண்டு பொருட்கள் வாங்கப்படுவதால், தனமே பொருட்களை விட உயர்ந்தது என்று ஆகிறது அல்லவா? தனத்தைக் கொண்டு எந்தப் பொருளையும், எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ள முடியும்! அதே போல, நாமம் எனும் தனத்தைக் கொண்டு "இறைரூபம்" எனும் பொருளைப் பெற முடியும். நாமம் எனும் தனத்தை படிப்படியாக சேர்த்துக்கொண்டால், இறைவனை தியானத்தின் மூலம் எளிதாக, எந்த சிரமமும் இன்றி உணரமுடியும். நாமஸ்மரணையில் உள்ள மற்றுமொரு விசேஷம் இதுதான்: யோகம் மற்றும் தவத்தினால் பல்வேறு சித்திகளைப் பெற முடியும். அவை வந்தவுடன், இறைவனையே மறந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது! கர்வத்தினால் கண்கள் மறைக்கப்பட்டு, ஒருவர் ஆன்மிக சாதனைகளால் பெற்ற அடிப்படை வெற்றியைக் கூட இழந்துவிடக் கூடும். நாம, ஜப, தியானத்தில் அப்படி அல்ல! இந்த மார்க்கங்களில் அப்படிப்பட்ட அபாயம் எதுவுமில்லை. இந்த மூன்று மார்க்கங்களால், மனிதருள் ப்ரேமை மேன்மேலும் அதிகமாகிக் கொண்டே வரும். ப்ரேமையினால் சாந்தி கைகூடும். எப்போது மனச்சாந்தி கிடைக்கிறதோ, மற்ற அனைத்து சௌகரியங்களும் தானாகவே பெறப்படுகின்றன. (தியான வாஹினி, அத்தியாயம்-7)
யோகம் மற்றும் தவம் மூலம் அசாதாரண சக்தி பெறப்படுகிறது; இறைநாமஸ்மரணை, ஜபம் மற்றும் தியானத்தின் மூலம் அசாதாரண ப்ரேமை அடையப்படுகிறது - அதுதான் வித்தியாசம்! - பாபா