azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 21 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 21 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Man is but the reflection of God. Humanity is very proximate to Divinity; but man seldom recognises this nearness. He allows his mind to lower him into the animal level, from which he struggled upward through many births. A diamond may appear as a piece of glass; but only those who do not know its value will use it as a paperweight and keep it on the table in the office room. Wise men will keep it inside an iron safe, under lock and key. Man is a diamond, not a piece of glass; he has to shine brilliantly, after going through the process of "cutting" or samskara (refinement). Samskara transforms man into God - manava into Madhava. We have a watch on our wrist, which costs Rs 500 or 600 or even 1,000. The steel out of which the entire watch was made may cost only four annas; but the samskara it underwent by means of human skill and intelligence raised its value and usefulness. Man too can transform himself into a priceless instrument for God-realisation through the proper use of his mind and intelligence. (Divine Discourse, Nov 06, 1967)
It is the realisation of oneness with the Divine, which alone can give lasting bliss. - BABA
மனிதன் இறைவனின் பிரதிபிம்பமே. மனிதகுலம் தெய்வீகத்திற்கு மிக அருகில் உள்ளது; ஆனால் மனிதன் இந்த அருகாமையை அரிதாகவே உணர்கிறான். அவன் பல பிறவிகளில் எந்த மிருகநிலையிலிருந்து மேல்நோக்கிச் செல்லப் போராடினானோ, அந்த நிலைக்கே தான் தாழ்ந்துவிட தன் மனதை அனுமதிக்கிறான். ஒரு வைரம் கண்ணாடித் துண்டு போலத் தோன்றலாம்; ஆனால் அதன் மதிப்பு தெரியாதவர்கள் தான் அதை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தி அலுவலக அறையில் மேசை மீது வைத்திருப்பார்கள். புத்திசாலிகள் அதை ஒரு இரும்புப் பெட்டியில் வைத்து பாதுகாப்பாக பூட்டி வைப்பார்கள். மனிதன் ஒரு வைரம், கண்ணாடித் துண்டு அல்ல; "பட்டை தீட்டுதல்" அல்லது சம்ஸ்காரம் (சுத்திகரிப்பு) என்ற செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, அவன் ஒளிவிட்டுப் பிரகாசிக்க வேண்டும். சம்ஸ்காரம் மனிதனை இறைவனாக மாற்றுகிறது, அதாவது மானவனை மாதவனாக மாற்றுகிறது. நம் மணிக்கட்டில், ஐநூறோ அறுநூறோ அல்லது ஆயிரம் ரூபாயோ மதிப்புள்ள ஒரு கடிகாரம் இருக்கிறது. முழு கடிகாரமும் செய்வதற்குத் தேவையான இரும்பின் மதிப்பு நான்கு அணாக்களாக மட்டுமே இருக்கலாம். ஆனால் மனிதத்திறன் மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் அது பெற்ற சம்ஸ்காரம், அதன் மதிப்பையும் பயனையும் உயர்த்தி விட்டது. மனிதனும் தன் மனதையும் புத்தியையும் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இறைவனை உணர்வதற்கான விலைமதிப்பற்ற ஒரு கருவியாக தன்னை நல்மாற்றம் செய்து கொள்ள முடியும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 06, 1967)
இறைவனுடனான ஏகத்துவத்தை உணர்வது மட்டுமே நிலையான பேரானந்தத்தைத் தர முடியும். - பாபா