azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
People talk about spiritual exercises and waste their lives. All these pursuits are a waste of time. It is enough if you develop sacred feelings. The chief sadhana (spiritual exercise) consists of getting rid of bad thoughts and cultivating good qualities. Whatever pilgrim centre you may visit, try to shed your bad tendencies. Develop good qualities instead. You should try to do good to those that have done harm to you. You must forget the harm done by others and also the good you have done to others. So you should forget what needs to be forgotten and remember those things that require to be remembered. What are the things you have to remember? The good that others have done to you. You must remember the good that has been done to you as something sacred. You must express your gratitude to them. Make all your actions conform to righteousness (dharma). Whatever actions you do remembering God will get sanctified thereby. (Divine Discourse, May 11, 1998)
There is no greatness in doing good to those who do you good. The superior being is one who returns good for evil. - Baba
மக்கள் ஆன்மிக சாதனைகளை பற்றிப் பேசிக்கொண்டு, தங்களுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த முயற்சிகள் அனைத்தும் கால விரயமே. புனிதமான உணர்வுகளை வளர்த்துக் கொண்டாலே போதுமானது. முக்கியமான சாதனை (ஆன்மிக சாதனை) என்பது தீய குணங்களை விடுத்து, நற்குணங்களை வளர்த்துக்கொள்வதில் தான் இருக்கிறது. நீங்கள் எந்த புண்ய க்ஷேத்திரத்திற்கு சென்றாலும், உங்களுடைய தீய மனோபாவங்களை விட்டுவிட முயலுங்கள். மாறாக நற்குணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தீங்கு செய்தவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்ய முயற்சிக்க வேண்டும். பிறர் உங்களுக்கு இழைத்த தீங்கையும், பிறருக்கு நீங்கள் செய்த நன்மையையும் மறந்து விட வேண்டும். எனவே, நீங்கள் எதை மறக்க வேண்டுமோ அதை மறந்து விட்டு, எதை நினைவில் கொள்ளவேண்டுமோ அதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை யாவை? பிறர் உங்களுக்கு செய்த நன்மை! உங்களுக்கு பிறர் செய்த நன்மையை நீங்கள் புனிதமானதாகக் கருதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டும். உங்களுடைய செயல்கள் எல்லாவற்றையும் தர்மத்தைப் பற்றி ஒழுகும் வகையில் மாற்றுங்கள். இறை சிந்தனையோடு நீங்கள் ஆற்றும் எந்த செயலானாலும் அது புனிதமடைந்து விடும். (தெய்வீக அருளுரை, மே 11, 1998)
உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வது ஒன்றும் பெரிய விஷயமல்ல. தீமை செய்பவர்களுக்கும் நன்மை செய்பவரே உயர்ந்தவராவார். - பாபா