azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 10 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 10 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
One evening Krishna took Arjuna far out of Dwaraka city and while they were alone together, He pointed at a bird flying over their head and asked him: "Arjuna, isn't that a dove?" Arjuna agreed and said that it was indeed a dove. Suddenly, Krishna turned towards him and said, "No, it is a crow." Arjuna concurred and said, "I am sorry, it certainly is a crow." Immediately, Krishna asked him, "A crow? No, it must be a kite. Isn’t it so?" and Arjuna again promptly agreed: "Yes. It is a kite." At this, Krishna smiled and asked Arjuna, "Are you in your senses? What exactly do you see? How can the same bird be a dove, a crow and a kite?" Arjuna said, "Who am I to dispute your statement? You can make it a crow even if it is not one, or change it into a kite. I have found that the safest thing is to agree with You, in full faith. I know of no other course." Only after this test of unflinching faith, Krishna assured Himself of the credentials of Arjuna to receive the holy Gita. (Divine Discourse, Nov 22, 1967)
You must welcome tests because it gives you confidence and ensures promotion. - Baba
ஒரு நாள் மாலை, கிருஷ்ணர் அர்ஜுனனை துவாரகா நகரத்திலிருந்து வெகுதூரம் அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரும் தனியாக இருந்தபோது, கிருஷ்ணர் தலைக்கு மேல் பறக்கும் ஒரு பறவையைக் காட்டி, "அர்ஜுனா, அது புறா தானே?" என்று கேட்டார். அர்ஜுனன் ஒப்புக்கொண்டு, “அது புறாதான்” என்று கூறினான். திடீரென்று, கிருஷ்ணர் அவன் பக்கம் திரும்பி, “இல்லை, அது காகம்” என்றார். அர்ஜுனனும் ஆமோதித்து, "மன்னிக்கவும், நிச்சயமாக அது காகம் தான்" என்றான். உடனே கிருஷ்ணர் அவனிடம், "காகமா? இல்லை, அது பருந்தாகத்தான் இருக்க வேண்டும். இல்லையா?" என்றார். அர்ஜுனன் உடனடியாக, "ஆம். அது பருந்து தான்" என்று ஒப்புக்கொண்டான். இதைப் பார்த்து, கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே அர்ஜுனனிடம் "நீ உன் சுயநினைவோடுதான் இருக்கிறாயா? நீ பார்ப்பது என்ன? ஒரே பறவை எப்படி புறாவாகவும், காகமாகவும், பருந்தாகவும் இருக்க முடியும்?" என்று கேட்டார். அர்ஜுனன், “உன் கூற்றை மறுப்பதற்கு நான் யார்? அது அப்படி இல்லாவிட்டாலும் கூட, உன்னால் அதை காகமாகவோ பருந்தாகவோ மாற்ற முடியும். முழு நம்பிக்கையுடன் நீ சொல்வதை ஏற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது என்பதை நான் அறிவேன். நான் வேறெந்த வழியையும் அறியேன்” என்று கூறினான். இவ்வாறு அர்ஜுனனின் அசைக்க முடியாத நம்பிக்கையை சோதித்த பிறகுதான், புனித கீதையைப் பெறுவதற்கான தகுதி அர்ஜுனனுக்கு இருப்பதை கிருஷ்ணர் உறுதி செய்துகொண்டார். (தெய்வீக அருளுரை, நவம்பர் 22, 1967)
சோதனைகளை நீங்கள் வரவேற்க வேண்டும், ஏனெனில் அது உங்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, முன்னேற்றத்தை உறுதி செய்கிறது. - பாபா