azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 02 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 02 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Science can offer you only temporary worldly comforts. Spirituality alone can give you enduring bliss. All the amenities which provide temporary comfort also give rise to unhappiness. A person may be sitting in an air-conditioned room. But his mind is filled with anxiety and worry. His brain is heated. One who has peace of mind will experience no discomfort even if he is in a forest. Peace, therefore cannot be got through science. In fact, science and technology today are leading man away from peace. All the ills of man today are due to the fact that his mind is never restful and quiet. The mind is preoccupied with worries. Even an inanimate machine needs some period of rest. But no rest is given to the mind. If we desire peace for the individual, for the society and for the nation, it can only be achieved through spiritual means. (Divine Discourse, May 06, 1988)
When the mind is directed towards Prakruti (Nature or world), bondage ensues. When you turn your mind towards Divinity, you experience Ananda (bliss). - Baba
விஞ்ஞானத்தால் உங்களுக்கு தாற்காலிக உலக சௌகரியங்களை மட்டுமே வழங்க முடியும். ஆன்மிகத்தால் மட்டுமே உங்களுக்கு நீடித்த பேரின்பத்தைத் தர முடியும். தாற்காலிக சுகத்தை அளிக்கும் அனைத்து வசதிகளும் மகிழ்ச்சியின்மையையே கொடுக்கின்றன. ஒருவர் குளிர்சாதன அறையில் அமர்ந்திருக்கலாம். ஆனால் அவருடைய மனம் நிம்மதியின்றி கவலையால் நிறைந்திருக்கும். அவருடைய மூளை சூடேறிப் போயிருக்கும். மனச்சாந்தி உள்ளவன் காட்டில் இருந்தாலும் எந்த அசௌகரியத்தையும் அனுபவிக்க மாட்டான். எனவே, சாந்தியை அறிவியலின் மூலம் பெற முடியாது. உண்மையில், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இன்று மனிதனை அமைதியிலிருந்து விலக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. இன்று மனிதனின் அனைத்து நோய்களுக்கும் காரணம் அவனது மனம் ஒருபோதும் நிம்மதியாகவும் அமைதியாகவும் இல்லாதிருப்பது தான். ஒரு ஜடமான இயந்திரத்திற்கு கூட சிறிது நேரம் ஓய்வு தேவை. ஆனால் மனதிற்கு ஓய்வே கொடுக்கப்படுவதில்லை. தனிமனிதன், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு சாந்தி வேண்டும் என்று நாம் விரும்பினால், அதை ஆன்மிக வழியில்தான் அடைய முடியும். (தெய்வீக அருளுரை, மே 06, 1988)
மனம் பிரக்ருதியை (இயற்கை அல்லது உலகம்) நோக்கி செலுத்தப்படும்போது, பந்தம் ஏற்படுகிறது. தெய்வீகத்தை நோக்கி உங்கள் மனதைத் திருப்பும் போது, நீங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கிறீர்கள். - பாபா