azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 28 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 28 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Through pure actions, the mind also gets purified. But mere purity of mind is not enough. The mind has to develop concentration. For cultivating concentration, devotion is of great value. Bhakti means getting rid of the separation from Bhagawan. There must be the realisation that the Divine is omnipresent and that you cannot separate yourself from God. To remember the omnipresent Divine, to chant His glories and adore Him, you need the tongue (power of speech). Jayadeva hailed the tongue as a God-given instrument to glorify the Lord. This sacred instrument should not be misused in any way for speaking ill of others or causing unhappiness to them. As enjoined in the Gita, avoid unpleasant speech and use only words that are true, comforting and good. Harshness in speech should be avoided. Only when the tongue is used in this way can it become pure and sacred. When your speech is sanctified, your life itself becomes sanctified! (Divine Discourse, Jan 19, 1989)
All actions you do with your hands should be sacred, pure, helpful to others and purposeful. - BABA
பரிசுத்தமான செயல்களால் மனமும் தூய்மை அடைகிறது. ஆனால் வெறும் மனத்தூய்மை மட்டுமே போதுமானதல்ல. மனக்குவிப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். மனக்குவிப்பை வளர்ப்பதற்கு பக்தி மிக அருமையான வழியாகும். பக்தி என்றால் பகவானிடமிருந்து பிரியாமல் இருப்பதே. தெய்வீகம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதையும், இறைவனிடமிருந்து உங்களைப் பிரித்துக்கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை நினைந்திருக்கவும், அவனது மகிமைகளைப் போற்றிப் பாடவும், உங்களுக்கு நாவன்மை (வாக் சக்தி) தேவை. இறைவன் புகழைப் பாடுவதற்கு அவன் அளித்த கருவியே நாக்கு என்று ஜெயதேவர் போற்றினார். இந்த புனிதமான கருவியை பிறரைக் குறை கூறுவதற்கோ அல்லது அவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதற்கோ எந்த வகையிலும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. கீதையில் கூறப்பட்டுள்ளபடி, விரும்பத்தகாத பேச்சைத் தவிர்த்து, சத்தியமான, இதமான நல்ல வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துங்கள். நாக்கை இவ்வாறு பயன்படுத்தினால்தான் அது பரிசுத்தமாகவும், புனிதமாகவும் ஆகும். உங்கள் பேச்சு புனிதமாகும்போது, உங்கள் வாழ்க்கையே புனிதமாகிறது! (தெய்வீக அருளுரை , ஜனவரி 19, 1989)
உங்கள் கைகளால் நீங்கள் செய்யும் எல்லா செயல்களும் புனிதமானதாகவும், பரிசுத்தமானதாகவும், பிறருக்கு உதவியாகவும், பயனளிப்பதாகவும் இருக்க வேண்டும். - பாபா