azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 24 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 24 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
You are all My Limbs, nourished by Me. You constitute the Sai Body. Sai will send you sustenance, wherever you are and whatever your function, provided you give Sai the things Sai considers sweet and desirable like virtue, faith, discipline and humility. Be happy that you are a limb of the Sai Body. Do not complain that you are the foot and so have to tread the hard ground. Do not be proud that you are the head and so, up and above. It is the same bloodstream, the stream of Prema (love) that circulates in both; the function of each is as valuable as the function of every other limb. The function of each limb is also unique, remember; so do not give room to despondency. Your part is something special, which only you can play. You cannot walk on your head; you cannot think with your feet. Let whatever be your position, win grace by your virtue, that is the main gain. (Divine Discourse, Mar 29, 1967)
Do not identify Me with this physical body. I am not Dehaswarupa (body), I am the Dehi (the indweller). There is no difference between you and Me. - Baba
நீங்கள் எல்லோரும் என்னால் போஷிக்கப்படும் எனது அங்கங்களே. சாயியின் தேகம் உங்களால் ஆனது. இனிமையானது, விரும்பத்தக்கது என்று சாயி கருதும் நல்லொழுக்கம், நம்பிக்கை, கட்டுப்பாடு மற்றும் பணிவு போன்றவற்றை நீங்கள் சாயிக்கு அளித்தால், நீங்கள் எங்கிருந்தாலும், எந்தப் பணியில் இருந்தாலும், சாயி உங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்திடுவார். நீங்கள் சாயி தேகத்தின் ஓர் அங்கம் என்பதில் மகிழ்ச்சி அடையுங்கள். நீங்கள் கால் என்பதால் கட்டாந்தரையில் நடக்க வேண்டி இருக்கிறதே என்று நொந்து கொள்ளாதீர்கள். நீங்கள் தலை என்பதால் மேலே உயர்ந்து இருக்கிறேன் என்று பெருமிதமும் கொள்ளாதீர்கள். இரண்டிலும் பாய்வது ப்ரேமை எனும் ஒரே ரத்த ஓட்டம் தான்; ஒவ்வொன்றின் செயல்பாடும் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டைப் போலவே மதிப்புமிக்கது. ஒவ்வொரு அங்கத்தின் செயல்பாடும் கூட தனித்துவமானது என்பது நினைவில் இருக்கட்டும்; எனவே அவநம்பிக்கைக்கு இடம் கொடுக்காதீர்கள். உங்களுடைய பங்கு சிறப்பு வாய்ந்தது, அதை நீங்கள் மட்டுமே ஆற்ற முடியும். நீங்கள் தலையால் நடக்கவும் முடியாது; காலால் சிந்திக்கவும் முடியாது. உங்களுடைய நிலை எதுவாக இருந்தாலும், நல்லொழுக்கத்தின் மூலம் இறையருளைப் பெறுங்கள்; அதுவே பெரும் பேறாகும். (தெய்வீக அருளுரை, மார்ச் 29, 1967)
நான் இந்த பௌதீக உடல்தான் என்று எண்ணாதீர்கள். நான் தேஹஸ்வரூபன் (உடல்) அல்ல, நான் தேஹி (உடலுள் உறைபவன்)! உங்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. - பாபா