azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
I have come to light the lamp of love in your hearts, to see that it shines day by day with added lustre. I have not come to speak on behalf of any particular dharma (faith). I have not come on any mission of publicity for any sect or creed or cause; nor have I come to collect followers for any doctrine. I have no plan to attract disciples or devotees into My fold or any fold. I have come to tell you of this universal unitary faith, this Atmic principle, this path of love, this duty of love, this obligation to love. Believe that all hearts are motivated by the One and Only God; that all faiths glorify the One and Only God; that all names in all languages and all forms man can conceive, denote the One and Only God; and His adoration is best done by means of love. Cultivate that Eka-bhava (attitude of Oneness), between men of all creeds, all countries and all continents. That is the message of love, I bring. That is the message I wish you to take to heart (Divine Discourse, Jul 04, 1968)
Your love is reflected in Me and My love is reflected in you. I accept your love and shower My love on all of you. Love is the binding force between all of us. - BABA
உங்களுடைய இதயங்களில் ப்ரேமஜோதியை ஏற்றி வைத்து, அது நாளுக்கு நாள் புத்தொளியுடன் பிரகாசிக்கச் செய்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான் எந்த ஒரு குறிப்பிட்ட தர்மத்தின் (மதம்) சார்பாகவும் பேசுவதற்கு வரவில்லை. வேறெந்த மதப்பிரிவுகள், சமயநெறிகள், பிற நோக்கங்கள் போன்றவற்றின் விளம்பரத்திற்காகவும், வேறெந்த சித்தாந்தத்தைப் பின்பற்றுவோரைச் சேகரிப்பதற்காகவும் நான் வரவில்லை. சீடர்கள் அல்லது பக்தர்களை என்னிடமோ அல்லது வேறெங்கோ ஈர்க்கும் திட்டம் எதுவும் என்னிடமில்லை. உலகளாவிய ஏகத்துவ மதம், ஆத்ம தத்துவம், ப்ரேம மார்க்கம், அன்பின் கடமை, அன்பு செலுத்த வேண்டிய கடமை ஆகியவற்றைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்வதற்காக வந்துள்ளேன். எல்லா இதயங்களும் ஒரே இறைவனால்தான் ஊக்கப்படுத்தப்படுகின்றன; எல்லா மதங்களும் ஒரே இறைவனைத்தான் போற்றுகின்றன; எல்லா மொழிகளிலும் உள்ள திருநாமங்களும், மனிதன் கண்டு உணரக்கூடிய எல்லா வடிவங்களும் ஒரே இறைவனைத்தான் குறிக்கின்றன; மேலும் அவனைப் போற்றுவதற்கான மிகச்சிறந்த வழி ப்ரேமையே என்பதை நம்புங்கள். எல்லாப் பிரிவுகள், எல்லா நாடுகள் மற்றும் எல்லாக் கண்டங்களிலும் உள்ள மனிதர்களுக்கிடையே அந்த ஏக-பாவத்தை (ஒற்றுமை உணர்வு) வளர்த்துக் கொள்ளுங்கள். நான் அருளும் ப்ரேமையின் அருட்செய்தி இதுவே. நீங்கள் இந்த அருட்செய்தியை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். (தெய்வீக அருளுரை, ஜூலை 04, 1968)
உங்களுடைய ப்ரேமை என்னிலும், என்னுடைய ப்ரேமை உங்களிலும் பிரதிபலிக்கின்றது. நான் உங்களுடைய ப்ரேமையை ஏற்றுக்கொண்டு, என் ப்ரேமையை உங்கள் அனைவரின் மீதும் பொழிகின்றேன். ப்ரேமையே நம் அனைவரையும் பிணைக்கும் சக்தியாகும். - பாபா