azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Develop broad-mindedness and put aside narrow-mindedness. Even if others trouble you and pose problems for you, bear it with patience believing that it will do you only good. The body, which is made up of five elements, has to fall and perish one day or the other. The indweller of the body is eternal, birthless and deathless and isn’t bound by any chains of bondage! In fact, this indweller is God Himself! When a beggar begs for food, he utters, “Bhavati Bhiksham Dehi”! He’s really begging from the ‘Dehi’ — the Indweller and not you. Recognise the truth that he is praying to the God in you for alms. It’s your ignorance if you think that he is begging from you. It amounts to arrogance. Divinity resides in everyone irrespective of whether one is a prince or a pauper. You adore this Divine Principle in everyone and love them, but love should be selfless. Love bereft of attachment to body flows equally towards everyone! Body consciousness leads to narrow-mindedness. (Divine Discourse, Nov 23, 2001)
The deha (body) has to be nourished so that man can reach the dehi, the real indweller. - BABA
பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், குறுகிய மனப்பான்மையை ஒதுக்கி வையுங்கள். பிறர் உங்களுக்குத் தொல்லை கொடுத்தாலும், உங்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், அவை உங்களுக்கு நன்மைதான் செய்யும் என்று நம்பி பொறுமையுடன் சகித்துக்கொள்ளுங்கள். பஞ்சபூதங்களால் ஆன உடல் என்றாவது ஒரு நாள் வீழ்ந்து அழியத்தான் வேண்டும். இந்த உடலின் உள்ளுறைபவர், நிரந்தரமானவர், பிறப்பு-இறப்பு அற்றவர், மேலும் எந்த பந்தத்தின் தளைகளாலும் பிணைக்கப்படாதவர். உண்மையில், இந்த உள்ளுறைபவர் இறைவனே! பிச்சைக்காரன் உணவை யாசிக்கும்போது, "பவதி பிக்ஷாம் தேஹி" என்று சொல்கிறான். அவன் உண்மையில் உள்ளுறையும் தேஹியிடம் யாசிக்கின்றானே தவிர உங்களிடம் அல்ல. உங்களுள் உள்ள இறைவனிடம்தான் அவன் யாசிக்கிறான் என்ற உண்மையை உணருங்கள். அவன் உங்களிடம் யாசிக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் அறியாமையே. அது ஆணவத்திற்குச் சமம். அரசன்-ஆண்டி என்ற வேறுபாடு ஏதுமின்றி தெய்வீகம் அனைவருள்ளும் உறைந்துள்ளது. ஒவ்வொருவருள்ளும் உள்ள இந்த தெய்வ தத்துவத்தைத்தான் நீங்கள் போற்றி நேசிக்கிறீர்கள்; ஆனால் அந்த அன்பு தன்னலமற்றதாக இருக்க வேண்டும். உடல் மீது பற்று இல்லாத அன்பு எல்லோரிடமும் சமமாகப் பாய்கிறது! உடல் உணர்வு குறுகிய மனப்பான்மைக்கு வழிவகுக்கிறது. (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 2001)
தேஹம் (உடல்) நன்கு போஷிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் மனிதன், உள்ளுறைபவரான சாஷாத் தேஹியை அடைய முடியும். - பாபா