azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The nectar in the story of Rama is like the Sarayu river, which moves silently by the city of Ayodhya, where Rama was born and ruled. Sarayu has its source in the Himalayan Lake of Mind (Manasa-Sarovar), just as this story is born in the lake of the mind! The Rama stream bears the sweetness of compassion; the stream of Lakshmana (Rama’s brother and devoted companion) has the sweetness of devotion. Just as the Sarayu river joins the Ganges and the waters commingle, so too, the streams of tender compassion and devotion (stories of Rama and Lakshmana) commingle in the Ramayana. Between them, compassion and love (karuna and prema) make up the composite picture of the glory of Rama! That picture fulfils the heart’s dearest yearning of every Indian, and to attain it is the aim of every spiritual striving! The effort of the individual is but half the pursuit; the other half is the grace of God. People fulfil themselves by self-effort as well as divine blessings; fulfilment takes them across the dark ocean of dualities to the immanent and transcendent One! (Ramakatha Rasavahini, Ch 1)
Individual effort and Divine Grace are both interdependent; without effort, there will be no conferment of Grace; without Grace, there can be no taste in the effort. - Baba
ராமர் பிறந்து ஆட்சி செய்த அயோத்தி நகரை ஒட்டி அமைதியாக ஓடும் சரயு நதி போன்று ராமகதையின் இனிமை உள்ளது. இந்தக் கதை, மனதின் ஏரியில் பிறந்தது போல, சரயு நதியும் இமயமலையின் மானசரோவர் ஏரியிலிருந்து தோன்றியதாகும். ராமர் எனும் நீரோடை கருணையின் இனிமையை உடையது; ராமரின் சகோதரனும், பக்தியுள்ள துணைவனுமான லட்சுமணன் எனும் நீரோடை, பக்தியின் இனிமையை உடையது. சரயு நதி கங்கையில் கலந்து, இரு நதிகளின் நீரும் சங்கமமாவது போல, கனிவான கருணை மற்றும் பக்தியின் நீரோடைகள் (ராம, லக்ஷ்மணர் கதைகள்) இராமாயணத்தில் சங்கமமாகின்றன. கருணையும் ப்ரேமையும் ஆன இருவரும் இணைந்து, ராமருடைய மகிமையின் ஒன்றிணைந்த சித்திரத்தை உருவாக்குகின்றனர்! அந்த சித்திரம் ஒவ்வொரு இந்தியனுடைய இதயத்தின் அன்பான ஏக்கத்தை பூர்த்தி செய்கிறது, மேலும் அதை அடைவதே ஒவ்வொரு ஆன்மிக சாதனையின் நோக்கமாகும்! தனி மனித சாதனை ஒரு பாதி மட்டுமே; மறு பாதி இறைவனின் அருளே. சுய முயற்சி மற்றும் இறை அருளால் மனிதர்கள் பூரணத்துவம் அடைகிறார்கள்; இந்த பூரணத்துவம் இருமைகளின் இருண்ட பெருங்கடலைக் கடந்து, உள்ளார்ந்த, அனைத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருளிடம் அவர்களை இட்டுச் செல்கிறது! (ராமகதா ரஸவாஹினி, அத்தியாயம்-1)
தனிமனித சாதனையும் இறையருளும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை; சாதனை இன்றி இறையருள் கிடைப்பதில்லை; இறையருள் இன்றி சாதனையில் சுவை இருக்க முடியாது. - பாபா