azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 05 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 05 Apr 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Animals like cattle and birds cannot change the qualities which they acquire with their birth. The lion, for instance, is born as a cruel animal. It lives and dies as a cruel animal. The cat is born with the quality of trapping the rats and of killing them. It lives with these qualities. Try as they may, these animals cannot change their bad and cruel qualities. You can make a cat sit on the chair and give it satwik food like milk, curd and so on, in an attempt to convert the cat, but the moment it sees a rat, it jumps to kill the rat. Thus, the animal, which is born with cruel qualities, cannot change in spite of our best efforts. However, man is not like that. Man may be born with cruel qualities; but such a person, by contact with good people, by living with good people, in a good environment, can change his qualities. It is in this context that it has been said that of all the living things that are born of a mother’s womb, to have a human birth is the most difficult thing. (Summer Showers, May 1977)
For man, to live like a human being, it is very necessary to learn self-control. - Baba
கால்நடைகள் போன்ற விலங்குகள் மற்றும் பறவைகள் தங்களுடைய பிறவிக்குணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. உதாரணமாக, சிங்கம் ஒரு கொடிய விலங்காகத் தான் பிறந்துள்ளது. அது ஒரு கொடிய விலங்காகவே வாழ்ந்து மடிகிறது. பூனை, எலிகளைப் பிடித்துக் கொல்லும் குணத்துடன் பிறக்கிறது. இந்த குணங்களுடனேயே அது வாழ்கிறது. அவை எவ்வளவு முயன்றாலும், இந்த விலங்குகள் தங்களது மோசமான மற்றும் கொடிய குணங்களை மாற்றிக்கொள்ள முடியாது. ஒரு பூனையைத் திருத்தும் முயற்சியாக, நீங்கள் அதை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, அதற்கு பால், தயிர் போன்ற சாத்விகமான உணவைக் கொடுக்கலாம்; ஆனால் ஒரு எலியைக் கண்டவுடனேயே அதைக் கொல்வதற்குப் பாய்ந்து விடும். கொடிய குணங்களுடன் பிறந்த விலங்கை நாம் எவ்வளவு முயன்றாலும் மாற்ற முடியாது. ஆனால் மனிதன் அப்படியல்ல. ஒரு மனிதன் கொடிய குணங்களுடன் பிறந்திருக்கக் கூடும்; ஆனால் அத்தகைய மனிதன், நல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்வதனாலும், நல்ல சூழலில், நல்லவர்களுடன் வாழ்வதனாலும், தனது குணங்களை மாற்றிக்கொள்ள முடியும். இதை மனதில் கொண்டுதான், தாயின் வயிற்றில் பிறக்கும் அனைத்து உயிரினங்களிலும் மனிதப் பிறவியைப் பெறுவது மிகவும் கடினமான ஒன்று என்று கூறப்படுகிறது. (பிருந்தாவனத்தில் கோடை அருள்மழை, மே 1977)
மனிதன், மனிதனாக வாழ்வதற்கு, சுயக்கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்வது மிகவும் அத்தியாவசியமாகும். - பாபா