azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 31 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 31 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Every object in Nature performs its specific function. The Sun and Moon are ceaselessly doing their duty. God is also carrying on His duties without any rest or pause. The rivers, by flowing towards the ocean convey the lesson that you shouldn’t give up your effort until you reach your destination. Man should involve himself in righteous actions in a spirit of equanimity. Life is a mixture of good and bad, ups and downs. Ignore the bad and enjoy what is good. If you buy a basket of mangoes, there may be some overripe and rotten fruits in it. You ignore them and consume good ones. Likewise, in life, you should forget the bad experiences and make use of good ones. Instead, man broods over the bad experiences and spoils even the good that comes his way. This is a sign of weakness. Human life is a procession of good and bad experiences, of joy and sorrow. These experiences depend on the changing conditions of time and place! (Divine Discourse, Mar 17, 1991)
There is no greater example of selfless love than Nature. - Baba
இயற்கையில் உள்ள ஒவ்வொரு பொருளும் தத்தம் பணியைச் செய்கின்றன. சூரியனும் சந்திரனும் தங்களுடைய கடமையை இடைவிடாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். இறைவனும் தனது கடமைகளை ஓய்வு இடைவெளி இன்றி ஆற்றிக் கொண்டிருக்கிறான். நீங்கள் இலக்கை அடையும் வரை உங்கள் முயற்சியைக் கைவிடக் கூடாது என்ற பாடத்தை நதிகள் கடலை நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருப்பதன் மூலம் உணர்த்துகின்றன. சமச்சீரான உணர்வுடன் மனிதன் தார்மீகமான செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது நல்லவை-கெட்டவை, ஏற்றங்கள்-இறக்கங்கள் ஆகியவற்றின் கலவையாகும். தீயவற்றை ஒதுக்கி நல்லவற்றை அனுபவியுங்கள். நீங்கள் ஒரு கூடை மாம்பழம் வாங்கினால், அதில் சில அதிகம் பழுத்த மற்றும் அழுகிய பழங்கள் இருக்கலாம். நீங்கள் அவற்றைத் தவிர்த்துவிட்டு, நல்லவற்றை உட்கொள்கிறீர்கள். அதுபோல, வாழ்க்கையில் கெட்ட அனுபவங்களை மறந்துவிட்டு நல்ல அனுபவங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக, மனிதன் தன் மோசமான அனுபவங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டு, தனக்கு வரும் நல்லதைக் கூட கெடுத்துக் கொள்கிறான். இது பலவீனத்தின் அடையாளமாகும். மனித வாழ்க்கை என்பது நல்ல மற்றும் கெட்ட அனுபவங்கள், சுகம் மற்றும் துக்கம் ஆகியவற்றின் தொடராகும். இந்த அனுபவங்கள் கால, தேசங்களின் மாறிவரும் சூழ்நிலைகளைப் பொறுத்ததாகும்! (தெய்வீக அருளுரை, மார்ச் 17, 1991)
தன்னலமற்ற ப்ரேமைக்கு இயற்கையை விட சிறந்த உதாரணம் வேறு இல்லை.- பாபா