azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
A good character is essential for the realisation of the Atma. In other words, all evil propensities have to be uprooted. Just as the army becomes dispirited and surrenders when the commander falls, so the army of evil qualities will surrender its arms as soon as egotism (ahamkara) is destroyed. The evil qualities are all natives of the realm of anger, so if that region is devastated, the soldiers can never again raise their heads. It is enough to accomplish this alone, for what can commander Egotism achieve without a single soldier to march under his orders? So, all efforts must be directed to destroying the realm of anger so that no commander can venture to let loose the hounds of war. Let each spiritual aspirant preserve the region of his mind in peace, by putting a stop to the rise of this commander and these soldiers. Let each spiritual aspirant bask forever under the smile of the ruler, the Atma. (Dhyana Vahini, Ch 5)
One’s anger is one’s greatest enemy and one’s calmness is one’s protection. One’s joy is one’s heaven and one’s sorrow is one’s hell. - Baba
ஆத்மாவை உணர நற்குணங்கள் அத்தியாவசியம். அதாவது அனைத்து தீய குணங்களும் வேரறுக்கப்பட வேண்டும். படைத்தளபதி வீழ்ந்தால் எப்படி சேனை கலங்கிப் போய் சரணடைகிறதோ, அதுபோல அகந்தை (அஹங்காரம்) அழிந்தவுடன், தீய குணங்கள் எனும் படையும் தனது ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்துவிடும். தீயகுணங்கள், கோபம் எனும் பிரதேசத்தைச் சார்ந்தவை; எனவே, அந்தப் பிரதேசமே அழிந்துவிட்டால், அந்த சிப்பாய்கள் மறுபடியும் தலைதூக்கவே முடியாது. இதனை சாதித்துவிட்டாலே போதுமானதாகும்; ஏனெனில் தனது கட்டளைகளை ஏற்று நடத்த ஒரு சிப்பாய் கூட இல்லை என்றால், அகந்தை எனும் படைத்தளபதியால் என்ன சாதிக்க முடியும்? எனவே, எந்த படைத்தளபதியும் போரைத் துவக்க இயலாதவாறு, கோபத்தை அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த படைத்தளபதியும் அவரது படைகளும் தலைதூக்குவதைத் தடுப்பதன் மூலம், ஒவ்வொரு ஆன்மிக சாதகரும் மனச்சாந்தியை பாதுகாத்துக் கொள்ளட்டும். ஒவ்வொரு ஆன்மிக சாதகரும் ஆத்மா எனும் அரசரின் அன்பில் என்றும் திளைத்திருக்கட்டும். (தியான வாஹினி, அத்தியாயம்-5)
ஒருவரது கோபமே அவரது மிகப்பெரிய எதிரி, ஒருவரது அமைதியே அவரது பாதுகாப்பு. ஒருவரது மகிழ்ச்சியே அவரது சொர்க்கம், ஒருவரது துயரமே அவரது நரகம். - பாபா