azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 24 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 24 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
After you achieve silence of the tongue (Vak Mounam), then there is Mano mounam (silence of the mind). The mind is a bundle of thoughts and fancies. These thoughts have to be reduced gradually. When thoughts are reduced, the mind naturally comes under control, like a clock that is unwound. When the activity of the mind is reduced, the power of the Atma (Divine Self) manifests itself. As a consequence, buddhi (intellect) becomes more active than the senses. When control of speech and control of the mind have been achieved, the state of Maha-mounam (supreme silence) is easily realised. Students should strive to reach the third stage by the disciplines of the first two stages. I have often told you, "Talk less and study more." What is meant by "study?" Study or education is the process of divinising one's Self. This calls for the cultivation of values in education. (Divine Discourse, Feb 03, 1994)
Silence means getting beyond the influence of all the senses and getting established always in the consciousness of one’s own reality. - Baba
நீங்கள் பேச்சில் மௌனத்தை (வாக்-மௌனம்) பெற்றபின் மனோமௌனத்தை (மனதால் மௌனம்) அடையவேண்டும். மனம் என்பது எண்ணங்கள் மற்றும் கற்பனைகளின் தொகுப்பாகும். இந்த எண்ணங்கள் படிப்படியாக குறைக்கப்பட வேண்டும். எண்ணங்கள் குறையும்போது, முடுக்கப்படாத கடிகாரம் போல மனம் இயற்கையாகவே கட்டுக்குள் வரும். மனதின் செயல்பாடு குறையும்போது, ஆத்மசக்தி (மெய்யுணர்வு) தானாகவே வெளிப்படுகிறது. இதன் விளைவாக, புத்தி, புலன்களை விட அதிக செயல்திறன் கொண்டதாக ஆகிவிடுகிறது. பேச்சு மற்றும் மனதின் கட்டுப்பாட்டைப் பெற்றவுடன், மஹா-மௌனம் (மிக உயர்ந்த மௌனம்) என்ற நிலையை எளிதாக அடைய முடிகிறது. மாணவர்கள், முதல் இரண்டு நிலைகளின் கட்டுப்பாட்டின் மூலம் மூன்றாவது நிலையை எட்ட பாடுபட வேண்டும். நான் உங்களுக்கு, “குறைவாகப் பேசுங்கள், அதிகமாக படியுங்கள்” என்று அடிக்கடிக் கூறுவதுண்டு. “படிப்பது” என்றால் என்ன? படிப்பது அல்லது கல்வி என்பது ஒருவர் தன்னை தெய்வீகமாக ஆக்கிக்கொள்ளும் முறையாகும். இதற்கு கல்வியுடன் நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது அவசியமாகிறது. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 03, 1994)
மௌனம் என்பது அனைத்து புலன்களின் தாக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்து, ஒருவரின் மெய்யுணர்வில் எப்போதும் நிலைகொண்டிருப்பதாகும். - பாபா