azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The passing show, this world (jagat), is based on illusions (maya). That is why it is branded ‘false’. But do not conclude that mere recognition of the falsity of the world or an awareness that one has certain shortcomings will lead one on the higher path and take one to the highest truth. Without a good character, full of sterling qualities, one can never achieve progress in the spiritual field. Progress depends on the worth and quality of the individual, just as the harvest depends on the fertility of the field. Upon such a worthy piece of land, sow the seeds of sterling qualities and irrigate with the waters of reason and analysis; the plentiful harvest will be ready in due time! On lands where the seedlings of good qualities are not planted and tended, useless weeds multiply; and where orderly gardens could have been formed, thorny bushes create a jungle of impenetrable confusion. (Dhyana Vahini, Ch 4)
Everything is in the heart of man. Divinity is installed in the heart. A foolish person is carried away by the wealth and pomp of the outside world. - Baba
இந்த உலகம் (ஜகத்) மாயையை ஆதாரமாகக் கொண்டதாகும். அதனால்தான் இது ‘அசத்தியம்’ என அழைக்கப்படுகிறது. ஆனால், உலகம் அசத்தியமானது என தெரிந்துகொள்வதனால் மட்டுமோ அல்லது நம்முள் சில குறைகள் இருப்பதை உணர்வதனால் மட்டுமோ ஒருவர் உன்னதமான சத்தியத்தின் நிலையை அடைந்துவிட முடியும் என்ற முடிவிற்கு வந்துவிடாதீர்கள். உன்னதப் பண்புகள் நிறைந்த நற்குணநலன் இன்றி ஒருவர் ஆன்மிகத் துறையில் முன்னேற்றம் அடைய முடியாது. நிலத்தின் வளமையைப் பொறுத்து அறுவடை எவ்வாறு இருக்குமோ, மனிதனின் யோக்கியதை மற்றும் பண்பைப் பொறுத்தே முன்னேற்றமும் இருக்கும். இப்படிப்பட்ட ஒரு சிறந்த நிலத்தில், நற்குணங்கள் என்ற விதைகளை விதைத்து, விவேகம் எனும் நீரைப் பாய்ச்சுங்கள்; தக்க சமயத்தில் அமோகமான விளைச்சல் தயாராக இருக்கும்! தரமான விதைகள் நடப்பட்டு பராமரிக்கப்படாத நிலங்களில், பயனற்ற களைகள் பெருகும்; சீரான தோட்டங்கள் உருவாக வேண்டிய இடத்தில், முட்கள் நிறைந்த புதர்கள் தோன்றி ஊடுருவ முடியாத அடர்ந்த காடு உருவாகிவிடும். (தியான வாஹினி, அத்தியாயம்-4)
அனைத்தும் மனிதனின் இதயத்தில் இருக்கிறது. இறைவன் இதயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளான். ஆனால் அறிவற்ற மனிதன் வெளியுலகின் செல்வச் செழிப்பிலும் பகட்டிலும் மயங்கிவிடுகிறான். - பாபா