azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 15 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 15 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Those who do not give up the path of discrimination (vichara marga) receive the grace of the Lord, and they also realise the Atma. They will always be seeking the eternal truth that lies behind the dream-like illusions of this world. Control the senses which run helter-skelter; then, origins of diseases will be destroyed. Let the mind keep a watch over its gymnastics; dam up the mad flood of thoughts, plans and schemes; then there will be no room for worries and anxieties in the mind. To diminish the wanderings of your thoughts, repeat the name of the Lord; that will keep out your sorrows and troubles. Without the effacement of the mind, spiritual wisdom cannot dawn. The full person is one who has succeeded in this. The spiritual aspirant must first learn the secret of the “inward sight”, the “vision directed inward”, and take the attention away from the exterior. (Dhyana Vahini, Ch 3.)
THOUGHTS OF GOD, CONTEMPLATION OF GOD, GRACE OF GOD –
THESE ALONE CAN CONFER THE PURITY WE NEED. - BABA
பகுத்தறிவின் மார்க்கத்தை (விசார மார்க்கம்) விடாமல் பின்பற்றுபவர்கள், இறைஅருளையும், மெய்யுணர்வையும் பெறுகிறார்கள். அவர்கள், இவ்வுலகில் கனவுகளைப் போன்ற பிரமைகளின் பின் இருக்கும் நித்ய சத்தியத்தை எப்போதும் தேடிக்கொண்டு இருப்பார்கள். தறிகெட்டு அலையும் புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்: பின்னர் வியாதிகளுக்கான மூலகாரணங்கள் மறைந்து போய்விடும். மனமும் அதன் சேஷ்டைகள் மீதும் கவனம் வைத்திருங்கள்; மடத்தனமான திட்டங்கள் மற்றும் சிந்தனைகளின் ஓட்டத்தை அணையிட்டுத் தடுத்து நிறுத்துங்கள்; பின்னர் கவலைகள் மற்றும் கலக்கங்களுக்கு மனதில் இடம் இருக்காது. உங்கள் எண்ணங்கள் அலைபாய்வதைக் குறைப்பதற்கு இறைநாமஸ்மரணை செய்யுங்கள்; அது உங்களுடைய துக்கத்தையும் துயரத்தையும் நீக்கிவிடும். மனோநாசம் அடைந்தவுடன் ஒருவருக்கு ஞானம் உதயமாகிறது; அப்படிப்பட்டவரே பரிபூரணமான மனிதராவார். ஆன்மிக சாதகர், "அகதிருஷ்டியை”, அதாவது "உள்நோக்கிய பார்வையைப்" பெறும் சூட்சுமத்தை முதலில் கற்றுக்கொண்டு, தனது கவனத்தை வெளியுலகிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். (தியான வாஹினி, அத்தியாயம்-3)
இறை சிந்தனை, இறை தியானம், இறையருள் – இவை மட்டுமே நமக்குத் தேவையான பரிசுத்தத்தை அளிக்க முடியும். - பாபா