azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
There are two types of people: one set on accusing themselves as sinners and others flattering themselves as great. Both types worry because of their own mental aberrations! What they both need is mental satisfaction; this can be obtained by meditation. Through meditation, understanding will increase and wisdom will grow. For this, a person should develop an interest in and a taste for meditation, that is, a yearning that admits of no other step and that won’t tolerate any obstacle. Of course, one may yearn to hear music and derive joy therefrom, or see bodies of close relatives who died and derive sorrow! Yearning may have pleasant or unpleasant consequences! Yearning must have the strength to inspire endeavour. In fact, yearning is but dormant endeavour, and endeavour is yearning in action. When yearning is weak, endeavour declines; when one is strong, the other is also active! (Dhyana Vahini, Ch.3)
FIRST, YEARNING, THEN SELECTION OF GOAL, THEN CONCENTRATION, AND THROUGH THE DISCIPLINE, CONQUEST OF THE MIND — THAT IS THE OBJECTIVE OF MEDITATION. - BABA
இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவகையினர் தங்களை பாவிகள் என்று நிந்தித்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால், இருவகையினருமே தங்களுடைய மனோவிகாரங்களால் அவதிப்படுகிறார்கள்! இப்படிப்பட்ட இருவருக்குமே மனத்திருப்தி அவசியமாகிறது; இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தியானத்தின் மூலம் தெளிவு அதிகரித்து, அறிவு வளரும். இதற்கு ஒருவர் தியானத்தில் வேறு எந்த வழியையும் அனுமதிக்காத, எந்தத் தடையையும் சகித்துக் கொள்ளாத ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும். ஒருவர் இசையைக் கேட்பதில் ஆர்வம் கொண்டு அதிலிருந்து ஆனந்தத்தைப் பெற ஏங்கலாம் அல்லது இறந்து போன உறவினர்களின் சடலங்களைக் கண்டு துக்கமடையலாம். ஏக்கம் என்பது விரும்பத்தக்க அல்லது விரும்பத்தகாத விளைவுகளைக் கொண்டதாக இருக்கலாம்! முயற்சியை ஊக்குவிக்கும் வலிமை படைத்ததாக ஏக்கம் இருக்க வேண்டும். உண்மையில் ஏக்கம் என்பது செயலில் வெளிப்படாத முயற்சியே; முயற்சி என்பது செயலில் வெளிப்படும் ஏக்கமே. ஏக்கம் பலவீனமாக இருக்கும்போது, முயற்சி குறைகிறது; ஒன்று வலுவாக இருக்கும்போது மற்றொன்றும் கூட செயல்திறன் கொண்டதாக இருக்கும்! (தியான வாஹினி, அத்தியாயம்-3)
முதலில், ஏக்கம், பிறகு இலக்கைத் தேர்வு செய்தல், அதன் பிறகு மனக்குவிப்பு, மேலும் ஒழுக்கத்தின் மூலம் மனதை வெல்வது - அதுவே தியானத்தின் நோக்கமாகும். - பாபா