azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 11 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 11 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The Minister was telling you to attend the discourse on Gita but there is no good in that if you lean on to a pillar of the Hall and doze off. It is not the sound but it is the meaning that matters; it is not the ear but it is the heart that must drink in the Gita. He wanted you to seek and enjoy Satsangam (good company); along with that sangam (congregation), there must be self-examination also - how much you have succeeded in escaping from the senses and nearing the Lord. Mana eva manushyanam karanam bandha mokshayoh - the mind binds and the mind liberates. So train the mind and win. It is a wild elephant, which can be tamed with the goad of Soham. Do not feed it with conceit, hate, envy and greed. Let the name of the Lord echo ever in the ear and the mind will be tamed. (Divine Discourse, May 22,1965)
DO NOT PAY MORE ATTENTION TO THE OUTSIDE WORLD THAN NECESSARY;
BUT, CONCENTRATE MORE ON THE INNER SPRINGS OF JOY - BABA
கீதை சொற்பொழிவில் பங்குகொள்ளுங்கள் என்று உங்களிடம் அமைச்சர் சொல்லிக்கொண்டிருந்தார்; ஆனால், மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்துகொண்டு நீங்கள் தூங்கி வழிந்தால், அதனால் எந்த நன்மையும் இல்லை. சொல் முக்கியமல்ல, அதன் பொருள்தான் முக்கியம்; செவி அல்ல, இதயம்தான் கீதையின் சாரத்தை அருந்த வேண்டும். நீங்கள் சத்சங்கத்தை (நல்லோரின் நட்புவட்டம்) நாடி, இன்புற வேண்டுமென அவர் விரும்பினார்; அந்த சங்கத்துடன் (சபை) சுயபரிசோதனையும், அதாவது புலன்களின் பிடியிலிருந்து விடுபட்டு இறைவனை நெருங்குவதில் நீங்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறீர்கள் என்பதும் இருக்க வேண்டும். மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோஹோ - மனமே பந்தத்தை ஏற்படுத்துகிறது, மனமே விடுதலையும் அளிக்கிறது. எனவே மனதைப் பயிற்றுவித்து வெற்றி பெறுங்கள். காட்டு யானையைப் போன்ற மனதை, ஸோஹம் எனும் அங்குசத்தால் அடக்க முடியும். அகந்தை, வெறுப்பு, பொறாமை, பேராசை ஆகியவற்றால் அதற்குத் தீனி போடாதீர்கள். உங்கள் காதில் இறைவனின் திருநாமம் எப்போதும் எதிரொலிக்கட்டும், மனம் வசப்படும். (தெய்வீக அருளுரை, மே 22, 1965)
தேவைக்கு அதிகமாக வெளி உலகத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டாம்; மாறாக அகத்தில் பெருகும் ஆனந்த ஊற்றுகளின் மீது அதிக கவனம் செலுத்துங்கள். – பாபா