azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Embodiments of Love! In this infinite universe, among the myriads of living beings humanity is eminent. Among human beings, it is a privilege to be born as a woman. There are many examples to demonstrate the preeminence of women. Was not Rama born as a Divine incarnation in Kausalya's womb? Did not Lava and Kusha (the twins) become great because they were born to Sita? Was it not Jijabai's loving care that made Shivaji great? Was it not Putlibai's piety that made Gandhi a Mahatma? All the greater sages, saints, heroes and warriors were born to women "who made them great”. The woman is the Goddess of Nature. It is obvious that feminine birth is estimable, adorable and sublime. The Veda also adores the feminine principle in various ways. (Divine Discourse, Nov 19,1995)
WHERE WOMEN ARE HONOURED AND ESTEEMED,
THERE DIVINITY IS PRESENT WITH ALL ITS POTENCY. - BABA
ப்ரேமையின் திருவுருவங்களே! இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில், எண்ணற்ற உயிரினங்களில் மனிதப்பிறவியே தலைசிறந்தது. மாந்தர்களுள் மாதராகப் பிறப்பது ஒரு பாக்கியமே. பெண்களின் மேன்மையை நிரூபிக்க பல உதாரணங்கள் உள்ளன. தெய்வ அவதாரமான ராமர் பிறந்தது கோசலையின் வயிற்றில் அல்லவா? லவனும், குசனும் தலைசிறந்தவர்களாக ஆனது அவர்கள் சீதைக்குப் பிறந்ததனால் அல்லவா? சிவாஜியை மாவீரனாக்கியது ஜீஜாபாயின் அன்பான வளர்ப்பல்லவா? காந்தியை மகாத்மாவாக ஆக்கியது புத்லிபாயின் பக்தி அல்லவா? மாமுனிவர்கள், துறவிகள், மாவீரர்கள், போர்வீரர்கள் என எல்லோருமே “அவர்களை உயர்ந்தவர்களாக ஆக்கிய" பெண்களுக்குப் பிறந்தவர்களே. பெண் இயற்கையின் தேவியாவாள். பெண்ணாகப் பிறப்பது என்பது மதிப்பிற்குரியது, போற்றத்தக்கது, மிக உன்னதமானது என்பது தெள்ளத் தெளிவாகிறது. வேதமும் தேவி தத்துவத்தை பல வழிகளில் போற்றுகிறது. (தெய்வீக அருளுரை, நவம்பர் 19, 1995)
பெண்கள் எங்கு கௌரவிக்கப்பட்டு மதிக்கப்படுகிறார்களோ, அங்கு தெய்வீகம் தன் பரிபூரண ஆற்றலுடன் திகழ்கிறது. - பாபா