azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 02 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 02 Mar 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Strive - that is your duty. Yearn - that is your task. Struggle - that is your assignment. If only you do these, sincerely and steadily, God cannot keep back for long the reward of Realisation. The river strives, yearns and struggles to merge with the sea from which it came. It has that consummation ever alert in its consciousness. It attempts to make itself pure and pellucid so that it may be welcome by its source. It overcomes every obstacle of terrain in order to journey successfully towards its goal. Man too must utilise all the physical, mental, moral, intellectual and material endowments that God has granted him so that he may journey to the goal of Realisation. Do not be misled by the belief of the existence of two entitles: this world and next, here and hereafter. Realise the hereafter here; this world is interwoven with the next. There is no truth in the disparity between secular and spiritual, godly and materialistic, heavenly and earthly. (Divine Discourse, Feb 16,1977)
YOU MUST HAVE THE GOAL OF MERGING IN THE ABSOLUTE (SAYUJYA) ALWAYS IN VIEW;
DO NOT GIVE IT UP OR FORGET IT. - BABA
பாடுபடுங்கள் - அது உங்கள் கடமை. ஏங்குங்கள் - அது உங்கள் பணி. போராடுங்கள் - அது உங்கள் பரீட்சை. இவற்றை மட்டும் நீங்கள் உண்மையாகவும், சீராகவும் செய்தால், மெய்யுணர்வு என்ற வெகுமதியைத் தருவதில் இறைவன் காலம் தாழ்த்த முடியாது. நதி, தான் எந்தக் கடலில் இருந்து வந்ததோ அதனுடன் இரண்டறக் கலப்பதற்காக பாடுபடுகிறது, ஏங்குகிறது, போராடுகிறது. அந்த முடிவைப் பற்றிய விழிப்புணர்வை தன் உள்ளுணர்வில் கொண்டுள்ளது. தன்னுடைய மூலாதாரம் தன்னை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் வகையில் தன்னைத்தானே தூய்மையாகவும், தெள்ளத் தெளிவாகவும் வைத்துக்கொள்ள அது முயல்கிறது. அது தனது இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணிக்க நிலப்பரப்பின் மீதுள்ள ஒவ்வொரு தடையையும் கடந்து செல்கிறது. மனிதனும் இறைவன் தனக்கு அளித்துள்ள உடல், மனம், ஒழுக்கம், அறிவாற்றல் மற்றும் பொருள்ரீதியான அனைத்து திறன்களையும் பயன்படுத்தி, மெய்யுணர்வு என்ற இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும். இம்மை-மறுமை, இகம்-பரம் என்று இரண்டு வகையாக இருப்பதாக எண்ணி குழப்பம் அடையாதீர்கள். மறுமையை இம்மையிலேயே உணருங்கள்; இகம் என்பது பரத்தோடு பின்னிப்பிணைந்ததுதான். உலகியல்-ஆன்மிகம், தெய்வீகமானவை-பொருள் சார்ந்தவை, விண்ணுலகம்-மண்ணுலகம் ஆகியவற்றிற்கு இடையே வேறுபாடுகள் இருக்கின்றன என்பதில் எந்த உண்மையும் இல்லை. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 16, 1977)
பரம்பொருளுடன் இரண்டறக் கலந்திடவேண்டும் (ஸாயுஜ்யம்) என்ற குறிக்கோளை எப்போதும் உங்கள் நோக்கமாக கொண்டிருங்கள்; அதை விட்டுவிடவோ மறக்கவோ செய்யாதீர்கள். - பாபா