azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 28 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 28 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Chandrama manaso Jatah, says the Purusha Sukta (mind arose from the Moon). Moon has sixteen facets. Likewise, the mind has sixteen facets. On Shivaratri night, fifteen of Moon's sixteen facets are invisible, and only one facet can be seen. The mind also is in the same state. If during Shivaratri one meditates on God, one can achieve nearness to the Divine. The supreme sacredness of Shivaratri consists in realising oneness with the Divine through meditation on God. What you deny is indeed the Reality; only Divine exists. The world is unreal. Forgetting the Real, men are lost in the pursuit of the transient. The world must be viewed as the reflected image of the Divine. All acts must be done as an offering to the Divine. True devotees of God should not attach any importance to differences of religion, caste or sect. These are merely differences in name and form. Realising that the sacred Shiva principle is present in everyone, devotees should not look down upon anyone or cause harm to others. (Divine Discourse, Feb 11,1983)
HOW CAN ONE SECURE PEACE OF MIND, WHEN ONE HAS NO CONTACT WITH THE VAST, THE TIMELESS, THE ALMIGHTY PROVIDENCE? WHEN GOD IS LAST, LIFE IS LOST. - BABA
சந்த்ரமா மனஸோ ஜாதஹ (மனம் சந்திரனில் இருந்து தோன்றியது) என்று புருஷ சூக்தம் கூறுகிறது. சந்திரனுக்கு பதினாறு கலைகள் உள்ளன. அதே போல, மனதிற்கும் பதினாறு கலைகள் உள்ளன. சிவராத்திரி இரவன்று, சந்திரனின் பதினாறு கலைகளில் பதினைந்து கலைகள் தெரிவதில்லை, ஒரே ஒரு கலையை மட்டுமே காண முடிகிறது. மனமும் கூட அதே நிலையில் தான் இருக்கிறது. சிவராத்திரியின்போது ஒருவர் இறைவனை தியானித்தால், அவர் இறைவனோடு நெருக்கமாக முடியும். இறைதியானத்தின் மூலம் இறைவனுடனான ஏகத்துவத்தை உணர்வதில்தான் சிவராத்திரியின் மகோன்னதமான புனிதத்துவம் இருக்கிறது. நீங்கள் எதை மறுக்கிறீர்களோ அதுதான் மெய்யானதாகும்; இருப்பது தெய்வீகம் மட்டுமே. உலகம் உண்மையானதல்ல. நிஜத்தை மறந்து, மனிதர்கள் நிலையற்றதைப் பின்தொடர்வதில் வழிதவறிவிடுகிறார்கள். உலகத்தை தெய்வீகத்தின் பிரதிபிம்பமாகவே பார்க்க வேண்டும். எல்லா செயல்களையும் இறையார்ப்பணமாக செய்ய வேண்டும். கடவுளின் உண்மையான பக்தர்கள் மதம், ஜாதி, குலம் போன்ற வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இவை வெறும் நாம, ரூபங்களில் வேறுபட்டவை. புனிதமான சிவதத்துவம் அனைவரிடமும் உள்ளது என்பதை உணர்ந்து, பக்தர்கள் யாரையும் தாழ்வாகக் கருதவோ, பிறருக்குத் தீங்கிழைக்கவோ கூடாது.(தெய்வீக அருளுரை, பிப்ரவரி 11, 1983)
அகண்டமான, காலத்திற்கு அப்பாற்பட்ட, எல்லாம்வல்ல பரம்பொருளுடன் ஒருவருக்கு தொடர்பு இல்லையென்றால், ஒருவர் மனச்சாந்தியை எவ்வாறு பெறமுடியும்? கடவுளுக்கு கடைசி இடம் கொடுத்தால் அந்த வாழ்க்கை கடைத்தேறாது. - பாபா