azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 26 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 26 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
There is a close mutual relationship between the attitude of the body and the attitude of our mind. So, people’s inner feelings will be evident from their physical body. The stance and the appearance of the body help us to discover these feelings. Take one example. With the loins girded, the sleeves of the shirt rolled, and the palms rounded into fists, it is not possible to exhibit love or devotion. With bent knees, the eyes half-closed, and the hands raised up over the head with the palms joined, is it possible to show one’s anger or hatred or cruelty? That is why the ancient sages guided the spiritual aspirant that it is necessary during prayer and meditation to adopt the appropriate bodily pose. They saw that it is possible to control the waywardness of the mind by this means. (Dhyana Vahini , Ch 2)
LIFE MUST BE SANCTIFIED BY MAKING PROPER USE OF THE BODY
AND ENGAGING IT IN SACRED ACTIONS. - BABA
உடலின் செயல்பாட்டிற்கும் நமது மனோபாவத்திற்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. மனிதர்களுடைய உள்ளுணர்வுகள் அவர்களது உடலின் மூலம் தெளிவாகின்றன. உடலின் நிலை மற்றும் தோற்றம் இந்த உணர்வுகளைக் கண்டறிய நமக்கு உதவுகிறது. உதாரணமாக, வேட்டியை வரிந்து கட்டி, சட்டையின் கைகளை மடித்து விட்டு, உள்ளங்கைகளை முஷ்டியாக உருட்டி ஓங்கிக்கொண்டு வருவது, ப்ரேமையையோ அல்லது பக்தியையோ வெளிப்படுத்துவதாக இருக்காது. கால்களை மண்டியிட்டு, கண்களை பாதி மூடி, கைகளை ஒன்றிணைத்து தலைக்கு மேல் உயர்த்திய நிலையில் இருப்பது ஒருவரது கோப, குரூரத்தை வெளிப்படுத்துவதாக இருக்காதல்லவா? அதனால்தான் பண்டைய முனிவர்கள், பிரார்த்தனை மற்றும் தியானத்தின் போது அதற்கேற்றஅமரும் நிலையை ஆன்மிக சாதகர்கள் பின்பற்றுவது அவசியம் என்று வழிகாட்டினார்கள். இதன் மூலம் மனதின் சஞ்சலத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கண்டனர். (தியான வாஹினி, அத்தியாயம்-2)
உடலை முறையாகப் பயன்படுத்தி, அதை பவித்ரமான செயல்களில் ஈடுபடுத்துவதன் மூலம் வாழ்க்கையைப் புனிதமாக்கிக்கொள்ள வேண்டும். - பாபா