azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
When you win the Love of God, His compassion will flow unto you. Love gives and forgives. Ego gets and forgets. When your son steals some money from the house, you do not hand him over to the police; but, when your servant steals a spoon, you have no such qualms. For, you have no love for the servant. Live without hating others, condemning others, and seeking faults in others. Vyasa, who wrote eighteen voluminous Puranas summarised all the Puranas in one single line of a small couplet: "Doing good to others is the only meritorious act; doing evil is the most heinous sin." When you feel you cannot do good, at least desist from doing evil. That itself is meritorious service! Do not try to discover differences; discover unity. Understand that the purpose of life is to know the Embodiment of Love, namely, God, through love, and demonstrate through your own Love that you have known Him. (Divine Discourse, Apr 04,1975)
THE BEST WAY TO GAIN HAPPINESS IS TO CHOOSE GOD AS THE LEADER AND GUIDE. THEN, HE WILL GUIDE AND GUARD, FROM WITHIN YOUR HEART. - BABA
நீங்கள் இறைவனின் ப்ரேமையை வென்றுவிட்டால், அவனது கருணை உங்கள் மீது பொழியும். ப்ரேமை கொடுக்கிறது, மன்னிக்கிறது. அகந்தை பெறுகிறது, மறந்துவிடுகிறது. வீட்டிலிருந்து உங்களுடைய மகன் கொஞ்சம் பணத்தைத் திருடிவிட்டால், நீங்கள் அவனை போலீஸிடம் ஒப்படைப்பதில்லை; ஆனால் உங்களுடைய வேலைக்காரன் ஒரு கரண்டியைத் திருடிவிட்டால், உங்களுக்கு அத்தகைய தயக்கம் எதுவும் இருப்பதில்லை. ஏனென்றால், உங்களுக்கு வேலைக்காரனிடம் எந்த ப்ரேமையும் இல்லை. பிறரை வெறுக்காமல், பழித்துரைக்காமல், பிறரிடம் குறை காணாமல் வாழுங்கள். பதினெட்டு புராணங்களை எழுதிய வியாஸர், அனைத்து புராணங்களின் சாரத்தையும் ஒரு சிறிய இரண்டுவரிப் பாடலில் தொகுத்தளித்துவிட்டார்: “பிறருக்கு நன்மை செய்வது ஒன்றே புண்ணியமாகும். தீங்கு செய்வது மிகக்கொடிய பாவமாகும்” உங்களால் நல்லதைச் செய்ய முடியவில்லை என்று நீங்கள் எண்ணினால், குறைந்தபட்சம் தீங்கு இழைக்காமல் இருங்கள். அதுவே புண்ணியமாகும்! வேற்றுமைகளைக் கண்டறிய முயற்சிக்காதீர்கள்; ஒற்றுமையைக் கண்டறியுங்கள். ப்ரேமையின் திருவுருவமான இறைவனை ப்ரேமையின் மூலம் அறிந்துகொள்வதும், நீங்கள் அவனை அறிந்திருப்பதை உங்களுடைய ப்ரேமையின் மூலம் நிரூபிப்பதும்தான் வாழ்க்கையின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.. (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 04, 1975)
இறைவனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் தேர்ந்தெடுப்பது சந்தோஷத்தைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழியாகும். பின்னர், அவன் உங்கள் இதயத்தில் வீற்றிருந்து வழிநடத்திக் காத்திடுவான். - பாபா