azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 22 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 22 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
There are three ways by which aspirants try to enter the path of meditation: On the pure and serene satwic path, one considers repetition of the Name and meditation as a duty and suffers any amount of trouble for its sake; one is fully convinced that all this is just an illusion, so one does only good under all conditions and at all times. One desires only the good of all and is always loving towards all; one spends time uninterruptedly in the remembrance and meditation of the Lord. One does not crave even the fruit of repeating the name and meditation; one leaves it all to the Lord! In the passionate, restless (rajasic) path, one craves the fruit of one’s actions at every step. If the fruit is not available, then, gradually, laxity and disgust overpower the spiritual aspirant and repetition of the Name and meditation slowly dry up. The ignorant (tamasic) path is even worse. The Lord will come into the memory only in times of danger or acute suffering or when one is the victim of loss or pain! (Dhyana Vahini, Ch.2)
WHY ASK FOR THIS OR THAT? HAVE FAITH IN GOD, THE GIVER OF ALL, THE ONLY TREASURE YOU NEED; HE WILL FILL YOU WITH CONTENTMENT. - BABA
ஆன்மிக சாதகர்கள் இந்த தியான மார்க்கத்தை மூன்று விதமாகக் கடைப்பிடிக்க முயலுகிறார்கள். சாத்விக மார்க்கத்தில், ஒருவர் நாமஸ்மரணையையும், தியானத்தையும் ஒரு கடமையாகக் கருதி, எத்தகைய கஷ்டத்தையும் சகித்துக் கொள்கிறார்; இவை அனைத்தும் வெறும் மாயையே என திடமாக நம்பி, எல்லாக் காலங்களிலும், எல்லா நிலைகளிலும் நல்லவற்றையே செய்கிறார். அனைவரின் நலனையே விரும்பி, அனைவரிடத்தும் எப்போதும் ப்ரேமை கொண்டவராக இருக்கிறார்; இடையறாது, இறைநாமஸ்மரணையிலும், தியானத்திலும் காலத்தை கழிக்கிறார். நாமஸ்மரணை மற்றும் தியானத்தின் பலனை நாடாது, அனைத்தையும் சர்வேஸ்வரனின் அனுக்ரஹத்தின் மீதே விட்டுவிடுகிறார்! ராஜசிக மார்க்கத்தில் ஒருவர் தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தனது செயல்களின் பலனுக்காக ஏங்குகிறார். பலன்கள் கிடைக்காவிட்டால், ஆன்மிக சாதகர் படிப்படியாக சோம்பலும், விரக்தியும் அடைந்து, நாமஸ்மரணையையும், தியானத்தையும் மெதுவாக விட்டுவிடுகிறார். தாமஸிக மார்க்கம் - இது இன்னும் மிக மோசமானது. ஆபத்துக்கள், துன்பங்கள் மற்றும் கஷ்ட நஷ்டங்களின் போது மட்டுமே இறைவனின் நினைவு வருகிறது! (தியான வாஹினி, அத்தியாயம்-2)
இது வேண்டும், அது வேண்டும் என்று ஏன் கேட்க வேண்டும்? இறைவன் அனைத்தும் அளிப்பவன், உங்களுக்குத் தேவையான ஒரே பொக்கிஷம், அத்தகைய இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவன் உங்களை திருப்தியால் நிரப்பிவிடுவான். - பாபா