azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 20 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 20 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Man is essentially divine in nature. Owing to various factors man tends to forget his inherent Divinity (Sat-Chit-Ananda). The veil of ignorance that conceals Divinity in him cannot be removed easily. Neither wealth, position nor scholarship can rid him of this malaise. Atma Jnana (Knowledge of Self) alone can provide the remedy. You shouldn’t be misled by pleasures derived from possessions, position or prosperity. These are transient things, which come and go. Pain and pleasure are incidental to human existence like kith and kin. Man should endeavour to realise his true nature, experience his inherent divinity, and not yield to temptations of the moment. Both pain and pleasure are impostors. Man shouldn’t allow himself to be led astray by them. The Self transcends time and space. It’s eternal and unchanging. Enquiry into the nature of the Self is the message of perennial philosophy. It is also the primary duty of man. (Divine Discourse, Nov 23,1986)
MEDITATION ON GOD IS AN UNFAILING REMEDY FOR HUMAN SUFFERING IF SUPPLEMENTED WITH THE PRACTICE OF DHARMA AND THE STRICT OBSERVANCE OF MORAL RESTRAINTS. - BABA
மனிதன் அடிப்படையில் தெய்வீக இயல்புடையவன். பல்வேறு காரணங்களால் மனிதன் தனது இயல்பான தெய்வீகத்தை (சத்-சித்-ஆனந்தம்) மறந்துவிடுகிறான். அவனுள் உறையும் தெய்வீகத்தை மறைக்கும் அறியாமை எனும் திரையை அவ்வளவு எளிதாக விலக்க முடியாது. செல்வத்தாலோ, அதிகாரத்தாலோ அல்லது அறிவாற்றலாலோ இந்தக் குறைபாட்டை மனிதனிடமிருந்து நீக்கிவிட முடியாது. ஆத்மஞானம் மட்டுமே இதற்கு நிவாரணம் அளிக்க வல்லது. உடைமைகள், அதிகாரம், ஐஸ்வர்யம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் சுகங்கள் உங்களைத் தவறாக வழி நடத்திடக் கூடாது. இவை வந்து போகக்கூடிய நிலையற்ற விஷயங்கள். இந்த சுக துக்கங்கள், வந்து போகும் உற்றார் உறவினர்களைப் போன்றவை. எனவே கணநேரமே இருக்கும் உலகியலான போகங்களுக்கு அடிபணிந்துவிடாமல் தனது உண்மை நிலையை உணர்ந்து தனது உள்ளார்ந்த தெய்வீகத்தை அனுபவிப்பதற்கு மனிதன் முயற்சிக்கவேண்டும். சுகமும், துக்கமும் விகாரமானவை. இவை தன்னை தவறாக வழிநடத்திச் செல்ல மனிதன் அனுமதிக்கக்கூடாது. ஆத்மா தேச காலங்களுக்கு அப்பாற்பட்டது. அது நித்யமானது, சத்தியமானது. ஆத்மஞான விசாரணையே சனாதன தர்மம். இதுவே மனிதனின் முதன்மையான கடமையும் ஆகும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1986)
தர்மத்தை அனுசரித்தல், ஒழுக்கநெறிகளை கடுமையாகக் கடைப்பிடித்தல் ஆகியவற்றுடன் இறை தியானம் செய்தால், அதுவே மனிதகுலத்தின் துன்பங்களுக்கு சரியான தீர்வாகும். - பாபா