azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The mind has to be focused in one direction. People must walk determinedly, using all their effort for the purpose of the aim and achievement they have set before themselves. If this is done, no force can pull them back; they can attain the position that is their due. Plunge the wayward mind, which is fleeing in all directions, in contemplation of the name of the Lord; the effect will be like concentrating the rays of the sun through a piece of a magnifying glass. The scattered rays develop the power of a flame to burn and consume. So too, when the waves of intellect and the feelings of mind get one-pointedness through the converging lens of the Atma, they manifest as the universal divine splendour that can scorch evil and illumine joy. Everyone is able to gain success in their profession or occupation only through one-pointed attention. Even the pettiest of tasks needs the quality of concentration for its fulfillment. No matter how tough the problem may be, everything yields before unswerving endeavour. (Dhyana Vahini, Ch 1)
KEEPING THE MIND FOCUSED CONSTANTLY ON THE ATMA AND
EXPERIENCING BLISS IN THE HEART IS TRUE SPIRITUALITY. - BABA
மனதை ஒரே பார்வை கொண்டதாக மாற்ற வேண்டும். மனிதர்கள் எந்தக் குறிக்கோள் மற்றும் சாதனையைத் தங்கள் முன் வைத்துக் கொண்டுள்ளார்களோ, அதனை அடைவதற்கான தங்களுடைய அனைத்து முயற்சிகளையும் எடுத்து, உறுதியுடன் முன்செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால், அவர்களுக்கு பின்னடைவு ஏற்படுத்த எந்த சக்தியாலும் முடியாது; அவர்கள் பெற வேண்டிய நிலையை அவர்கள் அடைய முடியும். எல்லாத் திசைகளிலும் பறந்தோடும் மனதை, இறைநாமஸ்மரணையில் ஆழ்த்திவிடுங்கள்; சூரியகிரணங்களை ஒரு பூதக்கண்ணாடியின் மூலம் ஓரிடத்தில் குவிப்பதைப் போன்ற விளைவு ஏற்படும். சிதறிச்செல்லும் கிரணங்கள் சுட்டெரித்துவிடும் ஒரு தீச்சுடரின் சக்தியைப் பெற்று விடுகின்றன. அதைப்போல, புத்தி மற்றும் மனச்சிந்தனைகளின் அலைகளை, ஆத்மா எனும் குவி-லென்ஸின் மூலம் ஒருமுகப்படுத்தினால், அவை ஸர்வ துர்குணங்களையும் த்வம்சம் செய்யும் ஆத்மசக்தியைப் பெற்று, ஸர்வ சந்தோஷங்களின் நிலையமான ஸர்வேஸ்வர ஜோதியாக வெளிப்படும். இவ்வுலகில், வியாபாரம் அல்லது வேலையில் வெற்றி பெறும் ஒவ்வொரு மனிதரும் தத்தம் ஏகாக்ரஹ சித்தத்தின் மூலமே காரியங்களை சாதிக்க முடிகிறது. எந்த ஒரு சின்னக்காரியமும் கூட ஏகாக்ரஹ சித்தமின்றி நடைபெறுவதில்லை. எவ்வளவு கடினமான பிரச்சனையும் கூட நிச்சலமான ப்ரயத்தனத்தின் மூலம் சாத்தியமாகிறது. (தியான வாஹினி, அத்தியாயம்-1)
மனதை ஆத்மாவின் மீது தொடர்ந்து ஒருமுகப்படுத்தி, இதயத்தில் பேரானந்தத்தை அனுபவிப்பதே உண்மையான ஆன்மிகமாகும். - பாபா