azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 03 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 03 Feb 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Since your vision is impaired by doubt, pride, or prejudice you don't see God, who is in you as well as outside you. You long for a thing that is not; you ignore the treasure that’s within your grasp. You swear you have no bird in your hand; you struggle for birds, that you believe, are waiting for you in the bush. The bird in the bush is only the image of the bird you have in your hand but you are unaware of this truth. You have faith in the senses and the knowledge they garner; you have faith in fancies and fantasies of your mind; you have faith in the conclusions of your reason; but you have no faith in God who cannot be bound or found by these. So, you fear, you grieve, you doubt! Have the curtain of ‘Thought of God’ all around you; then, deadly mosquitoes of desire and distrust cannot harm you. That curtain will confer health on you, through immunity from disease. You will have undisturbed ease, with nothing to pine for, nothing to fear from.(Divine Discourse, Apr 04,1973)
THE LIGHTHOUSE OF HOPE FOR THIS OCEAN OF LIFE IS GOD, WHO IS THE ONLY PERMANENT ENTITY. THIS LIGHTHOUSE NEVER FAILS. - BABA
உங்கள் பார்வை, சந்தேகம், தற்பெருமை அல்லது தப்பெண்ணத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால், உங்களுக்கு உள்ளும் புறமும் இருக்கும் இறைவனை நீங்கள் காண்பதில்லை. நீங்கள் இல்லாத ஒன்றிற்காக ஏங்கி, உங்கள் கைப்பிடிக்குள் இருக்கும் பொக்கிஷத்தைப் புறக்கணித்து விடுகிறீர்கள். உங்கள் கையில் பறவை எதுவும் இல்லை என்று சாதித்துவிட்டு, கூட்டில் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்பும் பறவைகளுக்காகப் போராடுகிறீர்கள். கூட்டில் இருக்கும் பறவை, உங்கள் கையில் இருக்கும் பறவையின் ப்ரதிபிம்பமே; ஆனால் இந்த உண்மை உங்களுக்குத் தெரிவதில்லை. புலன்களிலும் அவை சேகரிக்கும் அறிவின் மீதும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; உங்கள் மனதின் கவர்ச்சிகளிலும் கற்பனைகளிலும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; உங்கள் புத்தியின் முடிவுகளில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது; ஆனால் இவற்றால் கட்டுப்படுத்தவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாத இறைவன் மீது உங்களுக்கு நம்பிக்கை இருப்பதில்லை. எனவே, நீங்கள் பயப்படுகிறீர்கள், வருத்தப்படுகிறீர்கள், சந்தேகப்படுகிறீர்கள்! உங்களைச் சுற்றிலும் ‘இறைசிந்தனை’ என்ற வலையை விரித்துவிடுங்கள்; பின்னர், ஆசை மற்றும் அவநம்பிக்கை எனும் கொடிய கொசுக்கள் உங்களுக்கு தீங்கு செய்யமுடியாது. அந்த வலை உங்களை நோயிலிருந்து காத்து ஆரோக்கியத்தை அளிக்கும். ஏங்குவதற்கோ, பயப்படுவதற்கோ ஏதுமின்றி, இடையூறு இல்லாத நிம்மதி உங்களுக்கு இருக்கும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 04, 1973)
சம்சார சாகரத்தில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்குவது சாஸ்வதமான இறைவன் ஒருவனே. இந்தக் கலங்கரை விளக்கம் ஒருபோதும் கைவிடுவதில்லை. – பாபா