azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

People have to be doing some action (karma) or other from the moment of waking to the moment of sleeping — that is to say, from birth to death. They cannot sit quietly without doing action. No one can avoid this predicament! But each one has to understand clearly which kind of action to be engaged in. There are only two types: (1) sensory or binding actions (vishaya karmas) and (2) actions that liberate (shreyo karmas). The acts that bind have increased beyond control; as a result, sorrow and confusion have increased. Through these, no happiness and peace of mind can be gained. On the other hand, the actions that liberate yield progressive joy and auspiciousness with each single act. They give bliss to the Self (Atma-ananda) and are not concerned with mere external joy! Though the acts may be external, the attraction is all towards the internal. This is the right path, the true path! (Dhyana Vahini, Ch1)
WHEN YOU DO ACTIONS THAT PLEASE GOD, YOU WILL ALSO
HAVE THE REWARD THAT WILL PLEASE YOU. - BABA
மனிதர்கள் விழிப்பிலிருந்து உறங்கும்வரை, அதாவது, பிறப்பிலிருந்து இறப்புவரை, ஏதோ ஒரு செயலை (கர்மா) ஆற்றிக்கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. அவர்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்க முடியாது. எவராயினும் இதனைத் தவிர்க்க இயலாது! ஆனால், எப்படிப்பட்ட கர்மாவைச் செய்வதில் ஈடுபடவேண்டும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இருப்பது இரண்டு மார்க்கங்களே: (1) பந்தத்தை ஏற்படுத்தும் புலன்களால் ஆற்றப்படும் கர்மாக்கள் (விஷய கர்மாக்கள்) (2) பந்தவிமோசனம் தரும் கர்மாக்கள் (ஸ்ரேயோ கர்மாக்கள்). ஆனால், விஷயகர்மாக்கள் விபரீதமாகப் பெருகி, அதன் விளைவாக உலகில் துக்கமும், குழப்பமும் அதிகரித்துவிட்டன. அவற்றின் மூலம் எந்த சுக-சாந்தியையும் பெற முடியாது. மாறாக, ஸ்ரேயோ (பந்தவிமோசனம் தரும்) கர்மாக்கள், ஒவ்வொரு செயலின் மூலம் ஸ்ரேயஸை, அதாவது மங்களத்தை அளிக்கின்றன. இவை ஆத்மானந்தத்தை அளிப்பவையே அன்றி, புறவுலகியலான சந்தோஷங்களை அல்ல! இவை வெளிப்புற கர்மாக்களாக இருந்தாலும், இவை அனைத்தும் அகத்தை நோக்கியே ஈர்க்கப்பட்டிருக்கும். இதுவே சரியான மார்க்கம், சத்தியமான மார்க்கம்! (தியானவாஹினி, அத்தியாயம்-1)
இறைவனுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை நீங்கள் ஆற்றும்போது,
உங்களுக்கு மகிழ்ச்சி தரும் பலன்களை நீங்களும் பெறுவீர்கள். - பாபா