azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 29 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 29 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

What is the immortal part of man? Is it the wealth he has accumulated, the residences he has built, the physique he has developed, the health he has acquired, or the family he has reared? No, all that he has done, developed or earned are not going to last; he has to leave them all to the ravages of time. He cannot take with him even a handful of earth, the earth he loved so much. Discover the immortal 'I' and know that it is the spark of God in you; live in the companionship of the vast measureless Supreme and you will be rendered vast and measureless. When you hold a currency note in your hand and say proudly, “This is mine" that note laughs at you, for, it says, "O, how many thousand people have I known, who have prided themselves like this!" The body is but a tent; don't fondle that delusion. Pine for the dehi (indweller), He who resides therein and makes it active, makes it ponder and enables you to act. (Divine Discourse, Apr 06, 1965)
BE LIKE A TRUSTEE, HOLDING THINGS ON TRUST, ON BEHALF OF GOD, FOR PURPOSES WHICH HE LIKES AND APPROVES. - BABA
மனிதனின் அழியாத பகுதி எது? அவன் குவித்த செல்வமா, கட்டிய வீடுகளா, வளர்த்த உடற்கட்டா, பெற்ற ஆரோக்கியமா, பேணி வளர்த்த குடும்பமா? இல்லை, அவன் செய்த வளர்த்த சம்பாதித்த எதுவும் நீடிக்கப் போவதில்லை; காலத்தின் கோலத்தால் அவை அனைத்தையும் அவன் விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அவன் மிகவும் நேசித்த பூமியின் ஒருபிடி மண்ணைக் கூட அவன் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அழிவேயில்லாத 'நான்' என்பதைக் கண்டுபிடியுங்கள், மேலும் அது உங்களுள் உள்ள இறைவனின் ஒரு பொறிதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; பரந்து விரிந்த, அளவிட முடியாத பரம்பொருளுடனான துணையுடன் வாழுங்கள்; நீங்களும் பரந்து விரிந்த அளவிடமுடியாதவராக ஆக்கப்படுவீர்கள். ஒரு ரூபாய் நோட்டைக் கையில் பிடித்துக்கொண்டு, “இது என்னுடையது” என்று நீங்கள் பெருமிதத்துடன் சொல்லும்போது, அந்த நோட்டு உங்களைப் பார்த்துச் சிரிக்குமாம்; ஏனென்றால், “ஓ, இப்படிப் பெருமைப்பட்டுக் கொண்ட எத்தனை ஆயிரம் பேரை நான் பார்த்திருக்கிறேன்!" என்று அது கூறுமாம். தேஹம் ஒரு கூடாரமே அன்றி வேறில்லை; அந்த மாயையை கொஞ்சிக்குலவ வேண்டாம்; உள்ளுறையும் தேஹிக்காக ஏங்குங்கள். தேஹத்தில் குடிகொண்டு, அதை இயக்கும் இறைவனே, உங்களை சிந்திக்கவும் செயலாற்றவும் செய்கிறான். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 06, 1965)
இறைவன் விரும்பி, அங்கீகரிக்கும் நோக்கங்களுக்காக, அவர் சார்பாக, பொருட்களை நம்பிக்கையுடன் பாதுகாக்கும் ஒரு அறங்காவலரைப் போல இருங்கள். - பாபா