azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Markandeya held tight the Shivalinga and so, Yama's noose bound both himself and Shiva; that was the reason the boy was saved. The story teaches you to be ever in contact with God, for you do not know when the noose will be thrown. Attach yourself to the Highest, call it by any name, or conceive it in any form. But remember, without Dharma (righteousness) you cannot attain it. Don't be led away into the by-paths; keep to the highway. If you yield to alpabuddhi (inferior thoughts), you will be losing the akhanda-tatwa (principle of the Universal). Learn the means of winning Grace and earning purity from those who know - that is, the elders and the scholars who have put their learning into practice. Don't despair; don't hesitate. Grace can wipe off the past; Sat-prayatna, Sat-sanga and Sadachara (good self-effort, good company, and good practices) can ensure happiness in future.(Divine Discourse, Apr 01,1965)
EVEN INSURMOUNTABLE DIFFICULTIES WILL VANISH LIKE THIN MIST WHEN YOU FACE THEM WITH COURAGE AND SELF-CONFIDENCE. - BABA
மார்க்கண்டேயன் சிவலிங்கத்தை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டான், அதனால் யமனின் பாசக்கயிறு அவனையும் சிவனையும் சேர்த்துப் பிணைத்தது; அச்சிறுவன் காப்பாற்றப்பட்டதற்கு அதுவே காரணமாகும். இறைவனுடன் எப்போதும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று இந்தக் கதை உங்களுக்குக் கற்பிக்கிறது, ஏனெனில் யமனின் பாசக்கயிறு எப்போது உங்கள் மீது வீசப்படும் என்று உங்களுக்குத் தெரியாது. எந்தத் திருநாமமிட்டு அழைத்தாலும், எந்தத் திருவுருவத்தில் எண்ணினாலும், அந்த பரம்பொருளுடன் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று, தார்மிகமான வழியில் செல்லாமல் நீங்கள் அதை அடைய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறுகலான சுற்றுப்பாதைகளில் செல்லாமல், உயர்ந்த பாதையையே பற்றிச் செல்லுங்கள். நீங்கள் அற்பபுத்திக்கு (கீழ்த்தரமான சிந்தனைகள்) இடமளித்துவிட்டால், அகண்டதத்துவத்தை (ப்ரபஞ்சமயமான கோட்பாடு) இழந்துவிடுவீர்கள். இறையருளை வெல்வதற்கும் பரிசுத்தத்தைப் பெறுவதற்குமான முறைகளை, அவற்றைப் பற்றி அறிந்தவர்களிடமிருந்து - அதாவது, தாங்கள் கற்றதை நடைமுறைப்படுத்திய பெரியோர்கள் மற்றும் பண்டிதர்களிடமிருந்து, கற்றுக்கொள்ளுங்கள். மனம் தளராதீர்கள், தயங்காதீர்கள். இறையருள், கடந்தகால கர்மபலன்களை நீக்கிவிடும்; ஸத்ப்ரயத்தனம், ஸத்சங்கம், ஸதாசாரம் (நல்ல சுயமுயற்சி, நல்லோரின் சகவாசம், நற்செயல்கள்) ஆகியவை எதிர்காலத்தில் சந்தோஷத்தை உறுதி செய்ய முடியும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 01, 1965)
நீங்கள் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும்போது,
சமாளிக்க முடியாத சிரமங்கள் கூட பனி போல் மறைந்துவிடும். - பாபா