azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 12 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 12 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
It is only when man discovers the ultimate unchanging base that he can derive permanent peace; until then, he too will have to swing and sway in the changing world, between joy and grief. Like Vivekananda and Nagamahashaya, people must be urged by the thirst to know the Creator behind Creation, the Person behind the puppets. Nagamahashaya started from the attitude of Dasoham (I am the servant) and made himself so small by shrinking his individuality that he was able to wriggle out of the shackles of delusion and escape into the Universal Eternal Truth. Vivekananda, on the other hand, started from the attitude of Soham (I am He); he made himself so vast and grand, that he broke the shackles and merged with the Supreme Sovereign Truth. When you have earned that jnana of identity of your reality with the Reality behind the Universe, maya (illusion) cannot affect you. (Divine Discourse, Oct 4, 1965)
HAVE FIRM FAITH IN YOUR HEART AND FILL YOUR LIFE WITH LOVE.
THERE IS NO PATH BETTER THAN THIS. - BABA
மனிதன் இறுதியான, மாறாத, ஆதாரத்தைக் கண்டறிந்துகொள்ளும் போது மட்டுமே, அவன் நிரந்தரமான சாந்தியைப் பெற முடியும்; அதுவரை, மாறிக்கொண்டே இருக்கும் உலகில், சுகத்திற்கும், துக்கத்திற்கும் இடையில், அவனும் கூட, ஊசலாடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களான விவேகானந்தர் மற்றும் நாகமஹாசயரைப் போல, படைப்பின் பின்னால் உள்ள படைத்தவனை, பொம்மைகளுக்குப் பின் இருந்து இயக்கும் பொம்மலாட்டக்காரனை அறிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கையால் மக்கள் உந்தப்பட வேண்டும். நாகமஹாசயர், தாஸோஹம் (நான் தாஸன்) என்ற மனப்பாங்கிலிருந்து ஆரம்பித்து, தன் தனித்துவத்தைச் சுருக்கி, தன்னை மிகச் சிறியவராக ஆக்கிக் கொண்டதால், மாயையின் தளைகளிலிருந்து விடுபட்டு வெளியேறி, அவரால் ப்ரபஞ்ச நித்திய சத்தியத்தை அடைய முடிந்தது. மறுபுறம், விவேகானந்தரோ, ஸோஹம் (நான் இறைவனே) என்ற மனோபாவத்திலிருந்து தொடங்கினார்; தன்னை பிரம்மாண்டமானவராகவும், மகத்தானவராகவும் ஆக்கிக்கொண்டு, தளைகளை உடைத்தெறிந்து, அதி உன்னதமான பேருண்மையோடு இரண்டறக் கலந்து விட்டார். உங்களுடைய உண்மைநிலையை, ப்ரபஞ்சத்தின் பின் இருக்கும் மெய்யுணர்வுடன் அடையாளம் காணும் அத்தகைய ஞானத்தை நீங்கள் பெறும்போது, மாயை உங்களை பாதிக்க முடியாது. (தெய்வீக அருளுரை, அக்டோபர் 4, 1965)
உங்கள் இதயத்தில் திடமான இறைநம்பிக்கை வைத்து, உங்கள் வாழ்க்கையை ப்ரேமையால் நிரப்புங்கள். இதைவிட சிறந்த பாதை வேறெதுவும் இல்லை. - பாபா