azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
The tongue is the armour of the heart; it guards one's life. Loud talk, long talk, wild talk, talk full of anger and hate - all these affect the health of man. They breed anger and hate in others; they wound, they excite, they enrage, and they estrange. Why is silence said to be golden? The silent man has no enemies, though he may not have friends. He has the leisure and the chance to dive within himself and examine his own faults and failings. He has no more inclination to seek them in others. If your foot slips, you earn a fracture; if your tongue slips, you fracture someone’s faith or joy. That fracture can never be set right; that wound will fester forever. Therefore, use the tongue with great care. The softer you talk, the less you talk, and the sweeter you talk - the better for you and the world. (Divine Discourse, Mar 29,1965)
BE SILENT YOURSELF, THAT WILL INDUCE SILENCE IN OTHERS. - BABA
நாக்கு இதயத்தின் கவசமாகும்; அது ஒருவரின் உயிரைக் காக்கிறது. உரத்த பேச்சு, நீண்ட பேச்சு, பண்பற்ற பேச்சு, கோபமும் வெறுப்பும் நிறைந்த பேச்சு - இவை அனைத்தும் மனிதனின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. அவை மற்றவர்களிடம் கோபத்தையும், வெறுப்பையும் உண்டாக்குகின்றன; அவை காயப்படுத்தி, உணர்ச்சிவசப்படச் செய்து, ஆத்திரமூட்டி, பிரிவை ஏற்படுத்துகின்றன. மௌனம் பொன்னானது என்று ஏன் சொல்லப்படுகிறது? அமைதியான மனிதனுக்கு நண்பர்கள் இல்லாவிட்டாலும் எதிரிகள் இருப்பதில்லை. தனக்குள்ளேயே ஆழ்ந்து சிந்தித்து, தனது குறைகளையும், தவறுகளையும் ஆராய்வதற்கான அவகாசமும், வாய்ப்பும் அவனுக்கு இருக்கிறது. பிறரிடம் அவற்றைத் தேடுவதில் அவனுக்கு இனி நாட்டம் இருப்பதில்லை. உங்களுடைய கால் வழுக்கினால், உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்படுகிறது; உங்களுடைய நாக்கு தவறினால், நீங்கள் யாரோ ஒருவருடைய நம்பிக்கை அல்லது மகிழ்ச்சியை முறிக்கிறீர்கள். அந்த முறிவை ஒருபோதும் சரி செய்ய முடியாது; அந்த ரணம் என்றென்றைக்கும் ஆறாமலேயே இருக்கும். எனவே, நாக்கை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துங்கள். இதமாகப் பேசுவது, குறைவாகப் பேசுவது, இனிமையாகப் பேசுவது - இவற்றால் உங்களுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும். (தெய்வீக அருளுரை, மார்ச் 29, 1965)
நீங்கள் முதலில் அமைதியாக இருங்கள்;
அது மற்றவர்களிடம் அமைதியைத் தூண்டும். - பாபா