azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 08 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 08 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Be silent yourself; that will induce silence in others. Do not fall into the habit of shouting, talking long and loud. Reduce contacts to a minimum. Carry with you an atmosphere of quiet contemplation, wherever you happen to be. There are some who live in a perpetual hullabaloo, in a tornado of noise. Whether they are in an exhibition, a fair or a hotel, or temple or Prasanthi Nilayam, they wag their tongues and will not stop. These will not proceed far on the Godward road. There are others who relish disputes and arguments; they are never content with obvious facts; they must create doubts where none existed before, and shake faith. They dispute whether Rama is superior to Krishna, or whether Krishna is a fuller or a lower incarnation of Godhead! People who have not touched the outskirts of the capital city dare dispute about the appearance and glory of the Emperor, who resides in the palace in the heart of the city! (Divine Discourse, Jan 30, 1965)
SILENCE IS THE SPEECH OF A PURE AND SINCERE SPIRITUAL SEEKER.-BABA
நீங்கள் முதலில் அமைதியாக இருங்கள்; அது மற்றவர்களிடம் அமைதியைத் தூண்டும். சத்தம் போடுவது, நீண்ட நேரம் பேசுவது, உரக்கப் பேசுவது போன்ற பழக்கத்திற்கு ஆளாகாதீர்கள். தொடர்புகளை குறைந்தபட்சமாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருக்க நேர்ந்தாலும், ஆழ்ந்த அமைதியான சூழல் உங்களுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். சிலர் இடைவிடாத கூச்சலில், பேரிரைச்சலில் வாழ்கிறார்கள். கண்காட்சி, சந்தை, ஓட்டல், கோயில், பிரசாந்தி நிலையம் - என இவர்கள் எங்கிருந்தாலும் வளவளவென்று ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் இறைவனை நோக்கிய பாதையில் வெகு தூரம் செல்லமாட்டார்கள். வேறு சிலர் தகராறுகளையும் வாக்குவாதங்களையும் ரசிப்பவர்களாக இருப்பார்கள்; அவர்கள் ஒருபோதும் யதார்த்தமான உண்மைகளில் திருப்தியடைவதில்லை; அவர்களுக்கு, முன்பு இல்லாத சந்தேகங்களை உருவாக்கி, நம்பிக்கையை அசைத்துப் பார்த்தே ஆக வேண்டும். ராமர் கிருஷ்ணரை விட உயர்ந்தவரா, கிருஷ்ணர் பூரணமான அவதாரமா அல்லது குறைவான அவதாரமா என்றெல்லாம் வாதித்துக் கொண்டு இருப்பார்கள்! தலைநகரின் எல்லைப்புறத்தைக் கூட எட்டிப்பார்த்திராத இப்படிப்பட்ட மக்கள், நகரின் மையத்தில் அரண்மனையில் வசிக்கும் சக்ரவர்த்தியின் தோற்றம் மற்றும் மஹிமையைப் பற்றி வாதாடத் துணிகிறார்கள்! (தெய்வீக அருளுரை, ஜனவரி 30, 1965)
மௌனமே ஒரு தூய்மையான, நேர்மையான
ஆன்மிக சாதகரின் மொழியாகும். - பாபா