azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 07 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 07 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
For all types of spiritual discipline, congenial company is very necessary. Man is shaped by the company one keeps; so, be ever vigilant of the air you breathe; it is fouled by foul thoughts of men amongst whom you move. The pure water that falls as rain from the sky is changed into a hundred tastes and colours by the soil on which it falls. But, even slimy slush of gutter has some hope of turning into pure water again; for, when the Sun shines, it can rise as vapour into clouds and regain its pristine nature. To cleanse the mind, prayer is the water and repentance is the soap. Mere water or detergent cannot do the job; repentance must be followed by a resolute determination not to repeat the wrong. You must pray for help in sadhana, through Grace! Guard the wisdom gained from snares of attachment and aversion - this must be the theme. For, where there is duality, there is fear, decline and death.(Divine Discourse, Jan 30,1965)
SEEK THE COMPANY OF THE GOOD, THE SEEKERS, THE ASPIRANTS, AND THE DETACHED. THEN YOU WILL SEE THE LIGHT. – BABA
எல்லாவிதமான ஆன்மிக சாதனைகளுக்கும் சுமுகமான சகவாசம் அத்தியாவசியமாகும். மனிதன் அவன் வைத்துக்கொள்ளும் சகவாசத்தினால் தான் உருவாக்கப்படுகிறான்; எனவே, நீங்கள் சுவாசிக்கும் காற்றின் மீது எப்போதும் விழிப்புடன் இருங்கள்; நீங்கள் பழகும் மனிதர்களின் கெட்ட சிந்தனைகளால் அது கெட்டுப் போய்விடுகிறது. வானிலிருந்து பொழியும் தூய்மையான மழைநீர், அது விழுகின்ற நிலத்தின் தன்மைக்கு ஏற்ப நூறுவிதமான சுவைகளும், வண்ணங்களும் கொண்டதாக மாறி விடுகிறது. ஆனால், சாக்கடையில் ஓடும் சகதிக்குக் கூட மீண்டும் நல்ல தண்ணீராக மாறுவதற்கான வாய்ப்பு சற்று உள்ளது; ஏனெனில், சூரியன் பிரகாசிக்கும்போது அது ஆவியாகி மேகங்களாக மேலெழும்பி, அதன் தூய தன்மையை மீண்டும் பெற முடியும். மனதை தூய்மையாக்குவதற்கு பிரார்த்தனையே தண்ணீர், பச்சாதாபமே சோப்பு. வெறும் தண்ணீர் அல்லது சோப்பால் மட்டும் இந்தப் பணியைச் செய்ய முடியாது; பச்சாதாபத்தைத் தொடர்ந்து, தவறை மீண்டும் செய்யக்கூடாது என்ற திடமான உறுதி இருக்க வேண்டும். ஆன்மிக சாதனையில் உதவ இறை அருளை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். விருப்பு, வெறுப்பு எனும் வலைகளிலிருந்து விடுபட்டுப் பெற்ற ஞானத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள் - இதுவே குறிக்கோளாக இருக்க வேண்டும். ஏனெனில், எங்கு இருமை உள்ளதோ, அங்கு பயம், வீழ்ச்சி மற்றும் இறப்பு ஆகியவை இருக்கின்றன. (தெய்வீக அருளுரை, ஜனவரி 30, 1965)
நல்லவர்கள், ஆன்ம நாட்டமுடையவர்கள், சாதகர்கள் மற்றும் பற்றற்றவர்கள் ஆகியோரின் துணையை நாடுங்கள். பின்னர் நீங்கள் ஞானஒளியைக் காண்பீர்கள். - பாபா