azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Man is fundamentally Divine, and so, naturally, the more one manifests Divine attributes of Love, Justice, Truth and Peace, the more ananda (bliss) one is able to enjoy and impart. The less one manifests them, the more ashamed one ought to be as one is living counter to one’s heritage. The tree of life has to be watered at the roots, but now, those who plan to raise the standard of living, water branches, leaves and blossoms. The roots are the virtues; they have to be fostered so that the flowers of actions, words and thoughts may bloom in fragrance and yield the fruit of seva (service), full of the sweet juice of ananda. Planning for food, clothing and shelter is only promoting the well-being of the cart; also plan for the horse, the mind of man which has to use the food, clothing, shelter and other material instruments for the high purpose of 'escaping from the ego into the universal'.( Divine Discourse, Aug 03,1966)
THE MORE HUMAN VALUES ARE CHERISHED, THE BETTER WILL BE THE GROWTH OF SOCIETY, THE NATION AND THE WORLD. - BABA
மனிதன் அடிப்படையில் தெய்வீகமானவன், எனவே, இயற்கையாகவே, ப்ரேமை, நீதி, சத்தியம் மற்றும் சாந்தி ஆகிய தெய்வீக பண்புகளை ஒருவர் எந்த அளவுக்கு வெளிப்படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு ஆனந்தத்தை ஒருவர் அனுபவிக்கவும், அளிக்கவும் முடியும். அவற்றை ஒருவர் குறைவாக வெளிப்படுத்தும்போது அவர் தன் பாரம்பரியத்திற்கு மாறாக வாழ்கின்றார் என்பதற்காக அதிகமாக வெட்கப்பட வேண்டும். வாழ்க்கை எனும் மரத்திற்கு வேர்களில் நீர் பாய்ச்ச வேண்டும், ஆனால் இப்போது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த திட்டமிடுபவர்கள், கிளைகள், இலைகள் மற்றும் பூக்களுக்கு நீர் பாய்ச்சுகிறார்கள். நல்லொழுக்கங்களே வேர்கள்; இவற்றை பேணிக் காப்பதினால், சிந்தனைகள், சொற்கள், செயல்கள் எனும் மலர்கள் நறுமணத்துடன் மலர்ந்து, ஆனந்தம் எனும் இனிய சாறு நிறைந்த சேவை எனும் பழத்தைப் பெறலாம். உணவு, உடை மற்றும் உறைவிடத்திற்காக திட்டமிடுவது, உடல் எனும் வண்டியின் நல்வாழ்வை மட்டுமே மேம்படுத்துகிறது; ஆனால் மனிதனின் மனம் எனும் குதிரைக்காகவும் திட்டமிடுங்கள்; இந்த மனம்தான் அஹங்காரத்திலிருந்து விடுபட்டு சாக்ஷாத்காரத்தை அடையும் ஓர் உயர்ந்த நோக்கத்திற்காக உணவு, உடை, உறைவிடம் மற்றும் இதர உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். (தெய்வீக அருளுரை, ஆகஸ்ட் 03, 1966)
எந்த அளவுக்கு மனிதப்பண்புகள் பேணிக் காக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு சமூகம், தேசம் மற்றும் உலகின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். - பாபா