azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Picture a rosary of several types of beads. The string passes through each and holds all beads together, no doubt; but it’s only in the transparent beads, that the string is visible! So too, make yourself transparent, free from the wish and will that hide or befog: only then can the Inner Motivator be seen. You can’t argue that since it is not seen, it is not there! You can earn this transparency through purity of intention, impulse and instinct; that’s achieved by systematic and sincere spiritual discipline. A ladder has to be as tall as the height you want to reach; your sadhana has to be as long as the time taken to reach the goal! When the walls are completed, the scaffolding is removed; when the vision of the Reality is attained, forms of spiritual disciplines such as japa, vrata, puja, archana, sravana, kirtana (repetition, religious vows, worship, offerings, listening and singing) can be dispensed with. (Divine Discourse, Jan 30,1965)
JUST AS FIRE IS NEEDED TILL THE RICE IS COOKED, SO ALSO SPIRITUAL PRACTICES ARE NEEDED TILL YOU REALIZE YOUR OWN INNATE DIVINITY. - BABA
பலவகையான மணிகளைக் கொண்ட ஒரு ஜபமாலையை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். ஜபமாலையில் உள்ள நூல் ஒவ்வொரு மணியின் ஊடாகச் சென்று எல்லா மணிகளையும் ஒன்றாக இணைக்கிறது என்பதில் ஐயமில்லை; ஆனால் ஒளி ஊடுருவும் மணிகளில் மட்டுமே அந்த நூல் கண்ணுக்குப் புலப்படுகிறது! அதைப் போலவே, மூடுபனியாக மறைக்கும் விருப்பு, வெறுப்புக்கள் இல்லாத, ஒளிவுமறைவு அற்றவர்களாக உங்களை நீங்களே ஆக்கிக் கொள்ளுங்கள்; அதன் பிறகே, உந்துசக்தியாக உள்ளுறைபவரை காண முடியும். கண்ணுக்குப் புலப்படாததால் அது இல்லை என்று நீங்கள் வாதிட முடியாது. இந்த ஒளிவுமறைவற்ற தன்மையை நீங்கள் எண்ணம், தூண்டுதல் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றின் தூய்மையினால் பெற முடியும்; இது முறையான மற்றும் ஆத்மார்த்தமான ஆன்மிக சாதனையால் அடையப்படுகிறது. ஒரு ஏணி நீங்கள் ஏற வேண்டிய உயரத்தின் அளவுக்கு நீளமாக இருக்க வேண்டும்; உங்களுடைய ஆன்மிக சாதனையும், இலக்கை அடையும் காலம் வரை தொடர்ந்து இருக்க வேண்டும்! சுவர்கள் கட்டி முடிக்கப்பட்ட பின், சாரக்கட்டுகள் அகற்றப்படுகின்றன; அதைப்போல, ஆத்மதரிசனம் கிட்டியவுடன், ஆன்மிக சாதனைகளான ஜபம், விரதம், பூஜை, அர்ச்சனை, ஸ்ரவணம், கீர்த்தனம் ஆகியவற்றை விட்டுவிடலாம். (தெய்வீக அருளுரை, ஜனவரி 30, 1965)
அரிசி வேகும் வரை நெருப்பு எப்படித் தேவையோ, அதைப்போல, உங்களின் உள்ளார்ந்த தெய்வீகத்தை நீங்கள் உணரும் வரை ஆன்மிக சாதனைகளும் தேவைப்படுகின்றன. – பாபா