azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 04 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 04 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

To get happiness and peace (santosha and shanti) you must develop a pure and unsullied mind, untarnished by egoism and its progeny - lust, greed, envy, anger, hatred and the rest. For this, you must seek good company (satsanga), perform good deeds (satkarma), entertain only good thoughts (sat alochana) and read good books (satgranthas). You may see a thousand good things or listen to a thousand good words or read a thousand good books, but unless you put at least one into practice, the blemishes in the mirror of your heart will not be wiped off. The Lord cannot be reflected therein. Constant practice with full faith will transmute Nara into Narayana, Manava into Madhava (man into God); for Divinity (Narayana) is your real nature, Madhava is your real essence. You are but a wave of the sea; know it, and you are free!( Divine Discourse, Mar 17,1966)
THERE IS NO NEED TO GO TO A FOREST AND LEAD AN AUSTERE LIFE TO EXPERIENCE THE DIVINE WHO IS WITHIN EACH ONE. - BABA.
நீங்கள் சாந்தி, சந்தோஷங்களைப் பெறுவதற்கு, அஹங்காரம் மற்றும் அதன் சந்ததிகளான காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸர்யங்கள், மேலும் அதைப் போன்றவற்றால் கறைபடியாத, தூய களங்கமில்லாத மனதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் நல்லோரின் நட்பை (ஸத்ஸங்கம்) நாடி, நற்செயல்களை (ஸத்கர்மம்) ஆற்றி, நற்சிந்தனைகளை (ஸத்ஆலோசனை) மட்டுமே கொண்டு, உயர்ந்த நூல்களை (ஸத்கிரந்தங்கள்) படிக்க வேண்டும். நீங்கள் ஓராயிரம் நல்லவற்றைக் காணலாம் அல்லது ஓராயிரம் நல்ல வார்த்தைகளைக் கேட்கலாம் அல்லது ஓராயிரம் நல்ல புத்தகங்களைப் படிக்கலாம்; ஆனால் நீங்கள் அதில் குறைந்தது ஒன்றையாவது கடைப்பிடிக்காத வரை உங்கள் இதயமெனும் கண்ணாடியில் படிந்திருக்கும் மாசு நீக்கப்பட மாட்டாது! இறைவனை அதில் பிரதிபலிக்கச் செய்ய முடியாது. முழுமையான நம்பிக்கையுடன் கூடிய இடையறாத ஆன்மிக சாதனை, நரனை நாராயணனாக, மானவனை மாதவனாக (மனிதனை இறைவனாக) மேம்படுத்திவிடும்; ஏனெனில் தெய்வீகமே (நாராயணன்) உங்களது உண்மையான இயல்பு, மாதவனே உங்களது உண்மையான சாரம்! நீங்கள் கடலின் ஒரு அலையே; இதை அறிந்து கொள்ளுங்கள், விடுதலை பெற்றவராவீர். (தெய்வீக அருளுரை, மார்ச் 17, 1966)
ஒவ்வொருவருள்ளும் உறையும் தெய்வீகத்தை அனுபவிப்பதற்கு, காட்டிற்குச் சென்று துறவு வாழ்க்கை நடத்தவேண்டும் என்ற அவசியமில்லை. - பாபா