azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Jan 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Your troubles are often self-created. If you develop firm faith in God and surrender to His Will, He will not fail you. This is the concept of Sharanagati (submission to the Will of the Divine). The bliss that can be derived from this surrender to God cannot be got through any other means. Regard whatever happens to you as something intended for your good. Discover the bliss that can be derived from trials and tribulations. It is during their exile in the forest for twelve years that the devotion of the Pandavas developed to the highest degree. It is not a sign of true devotion to expect that life should be one unbroken chain of happiness and comfort. Is that true happiness at all? Thyagaraja asked whether happiness lay in the possession of wealth or in the service of the Lord. He found no joy in the acquisition of wealth. He experienced the greatest joy in recognising the omnipresence of the Lord. Similarly, all devotees should be conscious of the immanence of God in everything and carry on their daily duties as a consecration to the Divine!( Divine Discourse,Jul 14,1984)
AS CLOSE AS YOU ARE TO GOD, SO CLOSE IS GOD TO YOU. IF YOU UNDERSTAND THIS TRUTH, THEN YOU WILL REALISE THAT GOD IS EVERYWHERE. - BABA
உங்கள் பிரச்சனைகள் பெரும்பாலும் உங்களாலேயே உருவாக்கப்பட்டவை. நீங்கள் இறைவனிடம் திடநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, அவனது சங்கல்பத்திற்குப் பணிந்துவிட்டால், அவன் உங்களைக் காக்கத் தவறுவதில்லை. இதுவே சரணாகதி தத்துவமாகும். இறைவனிடம் இவ்வாறு சரணடைவதால் கிடைக்கும் பேரானந்தத்தை வேறெந்த வகையிலும் பெற முடியாது. உங்களுக்கு என்ன நடந்தாலும் அது உங்கள் நன்மைக்காகவே என்று கருதுங்கள். இடர்கள் மற்றும் இன்னல்களிலிருந்து பெறக்கூடிய பேரானந்தத்தைக் கண்டறியுங்கள். பாண்டவர்களின் பன்னிரண்டாண்டு வனவாசத்தின்போதுதான் அவர்களுடைய பக்தி மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தது. சுக சந்தோஷங்களின் சங்கிலித் தொடர் போல வாழ்க்கை இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது உண்மையான பக்தியின் அடையாளம் அல்ல. அதுதான் உண்மையான சந்தோஷமா? தியாகராஜர், சுகம் என்பது நிதியில் இருக்கிறதா அல்லது இறைவனின் ஸந்நிதி சேவையில் இருக்கிறதா என்று கேட்டார். அவர், செல்வத்தைக் குவிப்பதில் எந்த சந்தோஷத்தையும் காணவில்லை. இறைவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதை உணர்வதில் தான் அவர் பேரானந்தத்தை அனுபவித்தார். அதைப் போலவே, பக்தர்கள் அனைவரும் இறைவன் எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதை உணர்ந்து, தங்கள் அன்றாட கடமைகளை தெய்வார்ப்பணமாக செய்ய வேண்டும்! (தெய்வீக அருளுரை, ஜூலை 14, 1984)
நீங்கள் எந்த அளவுக்கு இறைவனுக்கு நெருக்கமாக இருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு இறைவனும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கிறான். இந்த உண்மையை நீங்கள் புரிந்து கொண்டால், பின்னர் இறைவன் எங்கும் இருக்கிறான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். - பாபா