azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 31 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 31 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

Life is a short play on the stage. This body is like a bubble. The mind is always fickle. In Gita, Arjuna confesses to Krishna that the mind, which is constantly vacillating, is difficult to control. Nevertheless, man has to concentrate on his true destination. What is this destination, the goal and the aim of life? The Bhagavata and the Bhagavad Gita have made this clear. Our destination is the source from which we came. As long as the individual is caught up in the Prakriti (phenomenal world), his mind will be unsteady and vacillating. The Vedic declaration, "Soham" (He is I) is demonstrated by the inhaling done during breathing. When you exhale and utter "Aham," you are giving up the "I". "So-ham" proclaims the identity of the individual and the Divine ('I am He'). This identity will not be understood as long as one is caught up in the tentacles of the material world.( Divine Discourse, Feb 11,1983)
MAN MUST TURN AWAY FROM THE MATERIAL TO THE DIVINE. INVOLVEMENT WITH THE MUNDANE SHOULD YIELD PLACE TO THE QUEST FOR SELF- REALISATION. – BABA
வாழ்க்கை என்பது ஒரு சிறு மேடை நாடகம். இந்த உடல் ஒரு நீர்க்குமிழி போன்றது. மனம் எப்போதும் சஞ்சலமானது. கீதையில் அர்ஜுனன், இடையறாது ஊசலாடிக்கொண்டிருக்கும் மனதைக் கட்டுப்படுத்துவது என்பது கடினமே என்று கிருஷ்ணரிடம் ஒப்புக்கொள்கிறான். ஆயினும்கூட, மனிதன் தான் உண்மையாகச் சென்றடைய வேண்டிய இடம் எது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். சென்றடைய வேண்டிய இடம், இலக்கு, மற்றும் வாழ்க்கையின் குறிக்கோள் என்பது என்ன? பாகவதமும், பகவத்கீதையும் இதைத் தெளிவாக்கியுள்ளன. நாம் எந்த மூலாதாரத்திலிருந்து வந்தோமோ, அதுவே நாம் சென்றடைய வேண்டிய இடம். மனிதன் ப்ரக்ருதியில் (உலகின் செயல்பாடுகளில்) சிக்கிக்கொண்டு இருக்கும்வரை, அவனுடைய மனம் நிலையற்றும், ஊசலாடிக்கொண்டும் இருக்கும். வேதவாக்கான "ஸோஹம்" (அவனே நான்) என்பது சுவாசிக்கும்போது உள்ளிழுக்கும் மூச்சினால் எடுத்துக் காட்டப்படுகிறது. நீங்கள் "அஹம்" என்று சொல்லி மூச்சை வெளிவிடும்போது "நான்" என்பதை விட்டுவிடுகின்றீர்கள். "ஸோ-ஹம்" என்பது தனிமனிதனும் இறைவனும் (நானே அவன்) ஒன்றே என்பதை பறைசாற்றுகிறது. பொருட்களாலான உலகின் பிடியில் ஒருவர் சிக்கிக்கொண்டிருக்கும் வரை இந்த ஒருமையைப் புரிந்து கொள்ள முடியாது. (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 11, 1983)
மனிதன் பொருள் சார்ந்த நோக்கிலிருந்து விலகி தெய்வீகத்திற்கு திரும்ப வேண்டும். உலகியலான விஷயங்களில் கொள்ளும் ஈடுபாடு தன்னை உணரும் வேட்கைக்கு இடமளிக்க வேண்டும். – பாபா