azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Love alone can reveal the Divinity latent in all. Love is God. Live in Love. Love lives by giving and forgiving; Self lives by getting and forgetting. Love is selflessness; Selfishness is Lovelessness. Do not waste your life pursuing the narrow interests of the self. Love! Love! Become what you truly are - embodiments of love. No matter how others treat you or what they think of you, don’t worry. Follow Jesus Christ. Live a life of love for your own evolution and not for what others say. Don’t imitate others. Cultivate your own life. You have your own heart, your own opinion, your ideas, your own will. Then why imitate? Imitation is human, but creation is Divine. Follow your chosen path. Let your own experience with God be your guide and master. Don’t go into the grave, copying others. You won't find God if you search in the outside world. Your own heart shining with Love is God's Love. (Divine Discourse, Dec 25,1979)
YOU SHOULD CONSTANTLY REMIND YOURSELF, "I AM GOD, I AM GOD, I AM GOD." - BABA
ப்ரேமை மட்டுமே எல்லாவற்றிலும் மறைந்திருக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்த வல்லது. ப்ரேமையே இறைவன். ப்ரேமையில் வாழுங்கள். ப்ரேமை என்பது கொடுப்பதிலும், மன்னிப்பதிலும் தான் இருக்கிறது. சுயநலம் என்பது பெறுவதிலும் மறப்பதிலும் தான் இருக்கிறது. சுயநலமின்மையே ப்ரேமை; ப்ரேமையின்மையே சுயநலம். குறுகிய சுயநலன்களைத் தேடுவதில், உங்களுடைய வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். ப்ரேமை! ப்ரேமை! நீங்கள் உண்மையில் எதுவோ அதுவாக, அதாவது ப்ரேமையின் திருவுருவங்களாக மாறுங்கள். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்தினாலும் அல்லது உங்களைப் பற்றி அவர்கள் என்ன நினைத்தாலும், அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காக அல்லாது, உங்களுடைய சொந்த முன்னேற்றத்திற்காக ப்ரேமை நிறைந்த வாழ்க்கை வாழுங்கள். மற்றவர்களை போலியாகப் பின்பற்றாதீர்கள். உங்களுக்கென்று ஒரு சொந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கென்று சொந்த இதயம், சொந்த கருத்து, சொந்த சிந்தனைகள், சொந்த சங்கல்பம் ஆகியவை இருக்கின்றன. பின் எதற்காக போலியாகப் பின்பற்ற வேண்டும்? பிறரைப் பார்த்து செய்தல் மனித இயல்பு, ஆனால், தானே சிருஷ்டிப்பது தெய்வ இயல்பு. நீங்கள் தேர்ந்தெடுத்த பாதையைப் பின்பற்றுங்கள். உங்கள் சொந்த இறைஅனுபவம் உங்களுக்கு வழிகாட்டியாகவும் ஆசானாகவும் இருக்கட்டும். மற்றவர்களைப் பின்பற்றிச் சென்று, உங்கள் முடிவை நீங்களே தேடிக்கொள்ளாதீர்கள். நீங்கள் புறவுலகில் தேடினால் இறைவனைக் காண முடியாது. ப்ரேமையால் பிரகாசிக்கும் உங்களுடைய இதயமே, இறைவனின் ப்ரேமையாகும். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 25, 1979)
"நானே இறைவன், நானே இறைவன், நானே இறைவன்" என்று உங்களை நீங்களே இடையறாது நினைவூட்டிக்கொள்ள வேண்டும். - பாபா