azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
In one's life, the years sixteen to thirty are the most precious. This is the period when all of one's faculties and energies are at their peak. Hence one should strive to make the best use of this period. Noble qualities like self-confidence, sacrifice, aspiration and courage must be acquired then. If this time of one's life is wasted, there will only be failures in later years. Bad thoughts, bad practices and backbiting should be eschewed altogether. During this crucial period, one should try to understand the purpose of life and concentrate one's efforts on achieving one's ideals. No spiritual effort is possible when one has dissipated one's physical and mental abilities. It is a pity that young people misuse these precious years of their lives by falling into bad ways. Swami expects them to develop all their human endowments and lead exemplary lives which will be a lesson to others.(Divine Discourse, Jan 13, 1984)
YOUNG PEOPLE SHOULD ENTHRONE SACRIFICE IN THEIR HEARTS, WEAR THE CROWN OF JUSTICE ON THEIR HEADS AND CARRY THE SWORD OF TRUTH IN THEIR HANDS. THESE ARE THE WEAPONS NEEDED TO DEFEND THE NATION. - BABA
ஒருவரது வாழ்வில் பதினாறு முதல் முப்பது ஆண்டுகள் மிகவும் மதிப்புமிக்கவை. ஒருவருடைய அனைத்து திறமைகளும் ஆற்றல்களும் உச்சத்தில் இருக்கும் காலம் இது. எனவே, ஒருவர் இந்த காலகட்டத்தை சிறப்பாகப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். தன்னம்பிக்கை, தியாகம், இலட்சியம், தைரியம் போன்ற உன்னத குணங்கள் அப்போது பெறப்பட வேண்டும். ஒருவரது வாழ்க்கையின் இந்த காலத்தை வீணாக்கிவிட்டால், பின்வரும் ஆண்டுகளில் தோல்விகளை மட்டுமே சந்திக்க வேண்டியிருக்கும். தீய எண்ணங்கள், தீய பழக்கங்கள், புறம் பேசுதல் ஆகியவற்றை முற்றிலும் கைவிட வேண்டும். இந்த முக்கியமான காலகட்டத்தில், ஒருவர் வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்; மேலும் ஒருவரின் இலட்சியங்களை அடைவதற்கான முயற்சிகளில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். உடல் மற்றும் மனத்திறன்களை ஒருவர் விரயம் செய்துவிட்ட பிறகு, எந்த ஆன்மிக சாதனையும் சாத்தியமில்லை. இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையின் இந்த பொன்னான ஆண்டுகளை தீயவழிகளில் செல்வதன் மூலம் தவறாகப் பயன்படுத்துவது பரிதாபத்திற்குரியது. இளைஞர்கள் தங்களின் அனைத்து மனித வளங்களையும் அபிவிருத்தி செய்து கொண்டு, மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் முன்மாதிரியான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று ஸ்வாமி எதிர்பார்க்கிறார். (தெய்வீக அருளுரை, ஜனவரி 13, 1984)
இளைஞர்கள் தங்கள் இதயசிம்மாசனத்தில் தியாகத்தை வீற்றிருக்கச் செய்து, நீதியை மகுடமாக தலையில் சூடி, சத்தியமாகிய வாளை கைகளில் ஏந்தியிருக்க வேண்டும். இவையே தேசத்தை காக்கத் தேவையான ஆயுதங்களாகும். – பாபா