azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 20 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 20 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Everyone declares himself or herself as a sadhaka (spiritual aspirant). Every believer claims that he is seeking God. One must enquire whether it is the so-called devotee who’s seeking God or whether it is God who is searching for a true devotee. Is the sadhaka serving God or is God serving the sadhaka? The service that the sadhaka is doing is trivial. Offering to God what God has provided is like offering to Ganga, water from Ganga! The truth is, it is God who is rendering service to devotees. All capabilities gifted by God should be used in the service of the Divine. There is no need to go in quest of God. God is all the time searching for the genuine and steadfast devotee. The sadhaka is approaching God for the fulfilment of his desires. He is after petty and transient benefits. He does not seek to understand the nature of true love or the Divinity that underlies everything! ( Divine Discourse, Jan 13,1984)
HE IS A TRUE SADHAKA (SPIRITUAL ASPIRANT) WHO REALISES THE DIVINITY PRESENT WITHIN HIM. THOSE WHO SEARCH FOR IT OUTSIDE FOLLOW THE WRONG PATH. - BABA
ஒவ்வொருவரும், ஆணோ அல்லது பெண்ணோ, தன்னை ஒரு ஆன்மிக சாதகர் என்று கூறிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு ஆஸ்திகரும் தான் இறைவனைத் தேடிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். பக்தன் என்று அழைக்கப்படுபவன் இறைவனைத் தேடுகிறானா அல்லது ஒரு உண்மையான பக்தனைத் தேடுவது இறைவனா என்பதை ஒருவர் ஆராய வேண்டும். சாதகன் இறைவனுக்கு சேவை செய்கிறானா அல்லது இறைவன் சாதகனுக்கு சேவை செய்கிறானா? சாதகன் செய்யும் சேவை துச்சமானது. இறைவன் அளித்ததை இறைவனுக்கே அர்ப்பணிப்பது, கங்கை நீரை எடுத்து கங்கையிலேயே அர்ப்பணம் செய்வது போன்றதாகும்! உண்மை என்னவென்றால், இறைவனே பக்தர்களுக்கு சேவை செய்கிறான். இறைவனால் அருளப்பட்ட அனைத்து திறன்களும், இறைவனுடைய சேவைக்கே பயன்படுத்தப்பட வேண்டும். இறைவனைத் தேடிச் செல்லவேண்டிய அவசியமில்லை. இறைவனே எப்போதும் உண்மையான மற்றும் உறுதியான பக்தனைத் தேடிக்கொண்டு இருக்கிறான். சாதகன் தன் ஆசைகள் நிறைவேறுவதற்காக இறைவனை அணுகுகிறான். அவன் அற்பமான, நிலையற்ற பலன்களையே நாடுகிறான். உண்மையான ப்ரேமையின் தன்மையையோ அல்லது எல்லாவற்றுக்கும் அடிப்படையான தெய்வீகத்தையோ அவன் புரிந்துகொள்ள முற்படுவதில்லை! (தெய்வீக அருளுரை, ஜனவரி 13, 1984)
தன்னுள் உறையும் தெய்வீகத்தை உணர்ந்தவனே உண்மையான ஆன்மிக சாதகன். அதை வெளியில் தேடுபவர்கள் தவறான பாதையைப் பின்பற்றுகிறார்கள். – பாபா