azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 09 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 09 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
There was Kanaka, born in a low caste. He was an ardent devotee, yearning in unbearable anguish to see Krishna. So, he went to Udupi, where there is a famous Krishna temple, established by the great sage, Madhwaachaarya himself. Being of low birth, he could not enter the temple and see the charming idol of Krishna. He stood before the outer door, but the idol was hidden by the flagpost in front of the shrine. He went round the outer wall and sought some crevice amidst the stones through which he could earn a faint glimpse. He saw that a stone was loose: with his fingers, he scooped out the mortar and made a narrow chink, and when he looked eagerly through it, he saw only the back of the idol. But he was overcome with delight! He danced in ecstasy, singing the glory of Krishna. Just at that moment, the idol turned towards him and Krishna granted him the full vision of His charm and majesty. Yearning was rewarded with grace. Yearning leads to surrender, and surrender gives the highest joy. Leave everything to His Will, accept whatever happens, whether pleasant or painful.(Divine Discourse, Jul 29,1969)
FAITH IN GOD BEING WITHIN THE HEART AS WELL AS FAITH IN HIS CONSTANT PRESENCE AND CONSTANT GUIDANCE - THESE WILL CONFER COURAGE, VIRTUE, AND ILLUMINATION. - BABA
கனகதாஸர் கீழ்ச்சாதியில் பிறந்தவர். தீவிர பக்தரான அவர், கிருஷ்ணரை தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் தாங்க முடியாத வேதனையில் இருந்தார். எனவே அவர், மாமுனிவரான மத்வாச்சாரியாராலேயே ஸ்தாபிக்கப்பட்ட புகழ் வாய்ந்த கிருஷ்ணர் கோயில் இருக்கும் உடுப்பிக்குச் சென்றார். கீழ்ச்சாதியில் பிறந்தவராக இருந்ததால், கோவிலுக்குள் சென்று கிருஷ்ணரின் வசீகரமான விக்ரஹத்தை அவரால் பார்க்க முடியவில்லை. அவர் வெளிக்கதவுக்கு முன் நின்று பார்க்க முயன்றார், ஆனால் சன்னதிக்கு முன்னால் இருந்த கொடிமரம் விக்ரஹத்தை மறைத்தது. அவர் வெளிப்புறச்சுவரைச் சுற்றிச் சென்று கற்களுக்கு இடையே ஏதேனும் சிறு இடைவெளி இருந்தால் அதன் வழியே தரிசனத்தை சற்றேனும் பெற முடியுமா என தேடினார். ஒரு கல் தளர்வாக இருப்பதைக் கண்டார்: தனது விரல்களால் சுண்ணாம்புக் கலவையை நீக்கி ஒரு சிறு துவாரத்தை உண்டாக்கினார்; அதன் வழியே அவர் ஆவலுடன் நோக்கியபோது, அவரால் விக்ரஹத்தின் பின்புறத்தை மட்டுமே காண முடிந்தது. ஆனால் அவர் மகிழ்ச்சியில் மூழ்கினார்! கிருஷ்ணரின் மகிமையைப் பாடிக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். அந்த தருணத்தில் விக்ரஹம் அவரை நோக்கித் திரும்பியது; கிருஷ்ணர் தன் வசீகரமான கம்பீரமான வடிவத்தின் பரிபூரண தரிசனத்தை அவருக்கு வழங்கினார். அவருடைய ஏக்கம் இறையருளைப் பரிசாகப் பெற்றுத் தந்தது. இறைவனுக்கான ஏக்கம் சரணாகதிக்கு இட்டுச் செல்கிறது, சரணாகதி மகோன்னதமான ஆனந்தத்தை அளிக்கிறது. எல்லாவற்றையும் இறைவனது ஸங்கல்பத்திற்கு விட்டுவிட்டு, இனிமையானதோ அல்லது வேதனையானதோ எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். (தெய்வீக அருளுரை, ஜூலை 29, 1969)
இறைவன் இதயத்தில் இருக்கிறான் என்பதில் நம்பிக்கை, அதனுடன் அவனது நிலையான ஸாந்நித்யம் மற்றும் வழிகாட்டுதலில் நம்பிக்கை - இவை தைரியம், நல்லொழுக்கம், ஞான ஒளி ஆகியவற்றை அளிக்கும். – பாபா