azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
You may have a costly transistor or watch or phonograph with you, but if you do not know how to use it efficiently they are mere lumber. Now, imagine what a wonderful machine you yourself are! Should you not know how to operate it and get the best results out of it? Provided there is the thirst to know, even one sage adept in that art is enough; many can light their lamps at the flame of that sage. Vyasa is one such, the first and foremost. That’s why he is described as Narayana Himself. By imbibing the teachings of Bhagavata, your tamo-guna (inertia) will be raised into rajo-guna (restless activity) and purified into satwa-guna (poise and serenity). It’s like fruit growing by the combined influence of earth and sun first into full sourness, then to partial sweetness and finally complete sweetness, in three stages. Man too by the twin forces of grace from God and yearning from within grows into the complete sweetness of bliss and love.( Divine Discourse, Jul 02,1966)
HUMAN BEINGS ARE A COMPOSITE OF MAN, BEAST AND GOD, AND IN THE INEVITABLE STRUGGLE FOR ASCENDENCY AMONGST THE THREE, YOU MUST ENSURE THAT GOD WINS BY SUPPRESSING THE MERELY HUMAN AND THE LOWLY BEAST. - BABA
உங்களிடம் விலையுயர்ந்த டிரான்சிஸ்டர் அல்லது கடிகாரம் அல்லது ஃபோனோகிராஃப் இருக்கலாம், ஆனால் அதை எவ்வாறு திறமையாக பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அவை வெறும் மரக்கட்டைகள் மட்டுமே. இப்போது, நீங்களே எவ்வளவு அற்புதமான ஒரு இயந்திரம் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! அதை எவ்வாறு இயக்கி அதிலிருந்து மிகச்சிறந்த பலன்களைப் பெறுவது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா? தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தாபம் மட்டும் இருக்குமானால், அந்தக் கலையில் தேர்ச்சி பெற்ற முனிவர், ஒருவர் இருந்தாலும் போதும்; அந்த முனிவரின் ஞானச்சுடரிலிருந்து பலர் அவர்களுடைய தீபங்களை ஏற்றிக் கொள்ள முடியும். வியாசர் இப்படிப்பட்ட முனிவர்களுள் முதலாமவரும், முதன்மையானவரும் ஆவார். அதனால்தான் அவர் ஸ்ரீமந்நாராயணனே என்று வர்ணிக்கப்படுகிறார். ஸ்ரீமத்பாகவதத்தின் போதனைகளை கிரஹித்துக் கொள்வதன் மூலம், உங்களுடைய தமோ குணம், ரஜோ குண நிலைக்கு உயர்த்தப்பட்டு, ஸத்வ குணமாக பரிசுத்தமாக்கப்படும். இது, பூமி மற்றும் சூரியனின் ஒருங்கிணைந்த சக்தியின் மூலம் முதலில் முழு புளிப்பாகவும், பின்னர் ஓரளவு இனிப்பாகவும், இறுதியாக முழுமையான இனிப்பாகவும், மூன்று நிலைகளில் வளரும் பழம் போன்றது. மனிதனும் கூட இறையருள் மற்றும் அகத்துள் ஏக்கம் என்ற இரட்டை சக்திகளால், ஆனந்தம் மற்றும் ப்ரேமையின் பரிபூரண இனிமையாக வளர்கிறான். (தெய்வீக அருளுரை, ஜூலை 02, 1966)
மனிதன், மிருகம், இறைவன், ஆகியோருடைய தன்மைகள் கொண்ட ஒரு கலவையே மனிதர்கள். இந்த மூன்றிற்குள்ளும் நிகழும் உயர்வுக்கான தவிர்க்க முடியாத போராட்டத்தில், வெறும் மனித மற்றும் தாழ்ந்த மிருகத்தன்மைகள் அடக்கப்பட்டு, இறைத்தன்மை வெற்றி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். - பாபா