azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 01 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 01 Dec 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
In spiritual matters, faith is the basic requisite for progress. That faith had to be guarded carefully. Yield to the Lord, who is more kin to you than your own parents; yield to no other. Do not allow your faith to falter with every passing gust of wind. Believe that all the three worlds cannot unseat Truth; all the fourteen worlds (lokas) cannot seat falsehood on the throne. Your duty is to carry on spiritual practices (sadhana) undisturbed by what others may say, holding fast to the certitude of your own experience. Bear with others with patience and understanding, and practise Sahana (fortitude) and sympathy. Try to discover points of contact, not of conflicts. Spread brotherliness and deepen kindness through knowledge. Then, life becomes worthwhile! (Divine Discourse, May 23, 1966)
SAHANA OR ENDURANCE GIVES PEACE AND REMOVES HATRED AND ANGER. SAHANA IS THE RICHEST TREASURE OF MAN. - BABA
ஆன்மிக விஷயங்களில், நம்பிக்கையே முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தேவையாகும். அந்த நம்பிக்கை கவனமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். உங்களுடைய பெற்றோரை விட உங்களுக்கு நெருங்கிய உறவினரான இறைவனுக்கு அடிபணியுங்கள்; வேறு எவருக்குமல்ல. கடந்து போகும் ஒவ்வொரு பலமான காற்றுக்கும் உங்கள் நம்பிக்கை தடுமாறுவதற்கு அனுமதிக்காதீர்கள். மூவுலகும் சேர்ந்து வந்தாலும் சத்தியத்தை வீழ்த்திட முடியாது, ஈரேழு பதினான்கு உலகும் சேர்ந்து வந்தாலும் அசத்தியத்தை அரியாசனத்தில் அமரவைக்க முடியாது என்பதை நம்புங்கள். உங்கள் சொந்த அனுபவத்தின் நம்பகத்தன்மையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு, மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படாமல் ஆன்மிகப் பயிற்சிகளை (சாதனை) தொடர்வது உங்கள் கடமையாகும். பொறுமை மற்றும் புரிதலுடன் மற்றவர்களை சகித்துக்கொண்டு, சஹனம் (சகிப்புத்தன்மை) மற்றும் பரிவைக் கடைப்பிடியுங்கள். இணக்கமாக இருப்பதற்கான வழிகளைக் கண்டறிய முயற்சி செய்யுங்கள், பிணக்கத்திற்கான வழிகளை அல்ல. சகோதரத்துவத்தைப் பரப்பி, அறிவின் மூலம் பரிவை ஆழமாக்குங்கள். பின்னர், வாழ்க்கை மதிப்புமிக்கதாக மாறும்! (தெய்வீக அருளுரை, மே 23, 1966)
சஹனம் அல்லது சகிப்புத்தன்மை சாந்தியைத் தருகிறது, மேலும் வெறுப்பையும் கோபத்தையும் நீக்குகிறது. சஹனம் மனிதனின் விலையுயர்ந்த பொக்கிஷமாகும். – பாபா