azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 29 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 29 Nov 2021 (As it appears in 'Prasanthi Nilayam')

What we need today are Uttama-purushulu (noble, high-minded men and women). Nations will be prosperous only when there are such persons with noble minds and hearts. Such persons will emerge in society only when there’s purity of mind and morality in society. Only a society with a moral foundation can foster such noble persons. Spirituality is the means for redemption. Morality and integrity are based upon spiritual consciousness. Spirituality alone will take man to the sacred path leading to his destiny. Spirituality alone can elevate man and raise him to higher levels. It’s the means to real national progress and prosperity. World peace can be secured only through spirituality. It‘s the means for the redemption of mankind. Forgetting spirituality, man is leading an artificial life based on worldly pleasures. Education should be used for promoting the nation's welfare. Knowledge gained through education should be used selflessly for promoting the welfare of humanity. (Divine Discourse, Nov 22, 1992)
WHATEVER KNOWLEDGE ONE MAY ACQUIRE,
ONE SHOULD USE IT FOR THE WELL-BEING OF ALL. - BABA
இன்று நமக்குத் தேவை உத்தம-புருஷர்கள் (உன்னதமான, உயர்ந்த எண்ணம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள்). இப்படிப்பட்ட உன்னத மனமும் இதயமும் கொண்ட மனிதர்கள் இருந்தால் மட்டுமே தேசங்கள் செழிப்புடன் இருக்கும். சமுதாயத்தில் மனத்தூய்மையும், ஒழுக்கமும் இருந்தால்தான் இப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் தோன்றுவார்கள். ஒழுக்கநெறியை அடித்தளமாகக் கொண்ட ஒரு சமூகத்தால் மட்டுமே இத்தகைய உன்னதமானவர்களை பேணிக் காக்க முடியும். ஆன்மிகம் கடைத்தேறுவதற்கான வழிமுறையாகும். ஒழுக்கமும் நேர்மையும் ஆன்மிக உணர்வை அடிப்படையாகக் கொண்டது. ஆன்மிகம் மட்டுமே மனிதனை அவனது இலக்கை நோக்கி செல்லும் புனிதமான பாதைக்கு இட்டுச் செல்லும். ஆன்மிகத்தால் மட்டுமே மனிதனை உயர்த்தி, மேலும் உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்ல முடியும். இதுவே உண்மையான தேசிய முன்னேற்றம் மற்றும் வளமைக்கான வழிமுறையாகும். உலக அமைதியை ஆன்மிகத்தின் மூலம்தான் பெற முடியும். இது மனிதகுலம் கடைத்தேறுவதற்கான வழிமுறையாகும். ஆன்மிகத்தை மறந்து, மனிதன் உலக இன்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்கையான வாழ்க்கையை நடத்தி வருகின்றான். கல்வி, நாட்டின் நலனை மேம்படுத்த பயன்படுத்தப்பட வேண்டும். கல்வியின் மூலம் பெறப்படும் அறிவை மனிதகுலத்தின் நலனுக்காக சுயநலமின்றி பயன்படுத்தப்பட வேண்டும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 22, 1992)
ஒருவர் பெறும் அறிவு எதுவாயினும், அதை அவர் அனைவரின்
நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும். - பாபா